சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் வகையில் பயனர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பம் வீடு வீடாக விநியோகம் இன்று கொலை தொடங்கியது.

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என  திமுக அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிகழ் நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் செப்டம்பர் 15ந்தேதி முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளை பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து, மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.  அரசுத் திட்டங்கள், பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

நியாயவிலை கடைப் பணியாளா்கள் மூலமாக ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும்.  இதற்கான  டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழகத்தில் 1 கோடி பெண்களுக்கு வழங்க திட்டம். 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.