லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியையும் வென்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி.
ஏற்கனவே நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகள் முடிவில், 3-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி. இந்நிலையில் இறுதி & 5வது போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தியாவின் கேப்டன் மிதாலி ராஜ் 79 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 30 ரன்களையும் அடிக்க, வேறு யாரும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை.
மொத்தம் 49.3 ஓவர்கள் ஆடிய இந்தியா, 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு, பிரீஸ் மற்றும் போஸ்க் இருவரும் அரைசதம் அடித்தனர். அதேசமயம், இலக்கை எட்டுவதற்கு அந்த அணி 48.2 ஓவர்களை எடுத்துக்கொண்டது. முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடரையும் 4-1 என்று வென்றது.