ஐதராபாத்:
பெண் பத்திரிகையாளரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கானா பாஜக தலைவர் மீது 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் தெலுங்கானா மாநிலத்தின் செய்தித் தொடர்பாளராக மாதவனேனி ரகுநந்தன் ராவ் இருந்து வருகிறார். இவர் வழக்கறிஞராக வும் பணியாற்றி வருகிறார்.
இவரிடம், ஆர்.சி.புரம் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், தனது கணவருடன் 2003 ல் கருத்து வேறுபாடு காரணமாக அப்போதே ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அப்போதே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
அதன்பிறகு, தனது கணவர் மீது சங்கரெட்டி நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞராக இருந்த பாஜக தலைவரை அணுகியுள்ளார். கடந்த 2007ம் டிசம்பர் 2ந்தேதி அன்று பெண் பத்திரிகையாளர் ராவ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு குடிக்க காபி வழங்கியுள்ளார்.. காபியை குடித்த பிறகு, மயக்கமடைந்து சுயநினைவை இழந்துள்ளார் .
பின்னர் அந்த பெண்ணை மாதவனேனி ரகுநந்தன் ராவ் படுக்கை அறைக்கு இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்து, அதை புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்பு வந்த பிறகு தான், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார் தான் சீரழிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அதை ஏற்க காவல்துறை மறுத்துள்ளது. மேலும் ராவ், அந்த பெண் பத்திரிகை யாளரையும், புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.
சுமார் 13 ஆண்டுகாலம் அவரது புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது அப்பெண் பத்திரிகையாளர் தெலுங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத்தை (எஸ்.எச்.ஆர்.சி) கடந்த மாதம் ஜனவரி 23, 2020 அணுகி புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையம், அந்த பண் பத்திரிகையாளர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆர்.சி.புரம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து மாதவனேனி ரகுநந்தன் ராவ் மீது 13 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.