
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார்.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி lநடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
மன்னிப்பு கேட்டு தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்தும் அப்பல்லோ நிர்வாகம் அவரை வேலையில் சேர்க்கவில்லை.
நடிகர் அஜித்தால் எனது வாழ்க்கையே பறிபோய் விட்டது. அவர் போட்ட மெயிலால்தான் எனது வேலை பறிபோனது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார் .
[youtube-feed feed=1]