சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரமடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்று போதும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்களிக்கும் வாக்காளர் எவருடையன ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவித்து உள்ளது.
மேலும், வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவை பின்வருமாறு:
1. ஆதார் அட்டை
2. பான் கார்டு
3. ரேஷன் அட்டை
4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்
5. ஓட்டுநர் உரிமம்
6. பாஸ்போர்ட்
7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்
8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
9. எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்
11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு