ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரையும் வென்றது விண்டீஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை எடுத்தது. குணதிலகா 96 ரன்கள் எடுத்து சத வாய்ப்பை இழந்தார்.
பின்னர், 274 ரன்களை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியின் துவக்க வீரர்களே, ஆட்டத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். துவக்க வீரர் எவின் லீவிஸ் 103 ரன்களை அடித்தார். மற்றொரு துவக்க வீரர் ஷாய் ஹோப் 84 ரன்களை அடித்தார்.
பூரான் 35 ரன்களை அடிக்க, 49.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது விண்டீஸ் அணி. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியையும் வென்ற நிலையில், தற்போது 2வது போட்டியையும் வென்றதன் மூலம், தொடரையே வென்றுவிட்டது.