இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது விண்டீஸ் அணி. கைவசம் 2 விக்கெட்டுகள் மீதமுள்ளன.
முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது இலங்கை அணி. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை ஆடியது விண்டீஸ்.
துவக்க வீரர் கேம்ப்பெல் 42 ரன்களை அடிக்க, மேயர்ஸ் 45 ரன்களை அடித்தார். நிக்ருமா 31 ரன்கள் சேர்க்க, விண்டீஸ் தடுமாறியது.
ஆனால், ஜோஷ்வா டா சில்வாவும், கார்ன்வாலும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். சில்வா 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கார்ன்வால் 60 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கிறார். அவருடன் கேமர் ரோச் துணை நிற்கிறார்.
இந்த ஜோடி சற்று நிலைக்கும் பட்சத்தில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தொடலாம். விண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 101 ஓவர்கள் ஆடி, 8 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கையின் சுரங்கா லக்மால் இதுவரை 5 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.