ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை அடித்துள்ளது.

ஏற்கனவே, முதல் 2 போட்டிகளை வென்ற விண்டீஸ் அணி, தொடரைக் கைப்பற்றிவிட்டது. தற்போது, இந்தப் போட்டியிலும் வென்றால், இலங்கையை ஒயிட்வாஷ் செய்யலாம்.

டாஸ் வென்ற விண்டீஸ் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில், ஹசரங்கா அதிகபட்சமாக 60 பந்துகளில் 80 ரன்களை அடித்தார்.

ஆஷன் பண்டரா 74 பந்துகளில் 55 ரன்களை அடித்தார். துவக்கவீரர் குணதிலகா 36 ரன்களை அடித்தார். கருணரத்னே 31 ரன்களை அடிக்க, இலங்கை அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை அடித்துள்ளது.