திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 6 தொகுதிகள் உறுதியானவுடனேயே, சமூக வலைதளங்கள் உள்பட, பல தரப்பிலிருந்தும், ஆளூர் ஷா நவாஸுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற குரல்கள் எழுந்தன.

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவரான ஷா நவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறுபான்மை முகமாகவும், துணைப் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போது, திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள சூழலில், மற்றொரு மத்திய மாவட்டமான நாகப்பட்டினத்தில், நாகை பொது தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்தமுறை மத்திய மாவட்டத்தில் வாய்ப்பு பெற்று தோல்வியடைந்த ஷா நவாஸ், இந்தமுறை மற்றொரு மத்திய மாவட்ட தொகுதியில் வெல்வாரா?