‘டில்லி:
இரட்டை இலை சின்னத்ததை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுக்கு இன்று (ஏப்.,26) ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரநஅ மீது டில்லி போலீசார் வழக்கு பதிந்தனர். இது குறித்து நான்காவது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு, டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்..
விசாரணை நடைபெற்ற இடத்திலிருந்த காவல்நிலைய சிறையிலேயே தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று மதியம் இரண்டு மணிக்கு டில்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் தினகரன் நேரில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. ஒருவேளை போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்த விரும்பினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார். அதற்கு நீதிபதி மறுத்தால், இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
இடைத்தரகர் சுகேஷ் உடன் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். அப்படியொரு சூழல் ஏற்பட்டால் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனாலும் தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என அவபகு வக்கீல் தெரிவித்துள்ளார்.