தமிழில் 90 களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த வராக இருப்பவர் நடிகை சிம்ரன். சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி மற்றும் இளம் ஹீரோக்க ளுடனும் நடித்திருக்கிறார். இன்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒன்ஸ்மோர். விஐபி படங்களில் நடித்து 23 வருடங்கள் ஆனதை நினைவு கூர்ந்தி ருக்கிறார். இதுபற்றி அவர் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
’ஒன்ஸ்மோர்’ படத்தில் சிவாஜி சாருடன் நடித்தது இன்றைக்கு 23 வருடத்துக்கு பிறகும் நினைவைவிட்டு அகலாத அனுபவம். அது என் கனவு நிறைவேறி யது போன்றதாகும். இன்றுவரை அவரது ஆசிர்வாதம், அவரிடம் கற்றுக்கொண்டது எல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு இருக்கும் நான். அப்படத்தில் நண்பர் விஜய்யுடன் இணைந்து நடித்தேன்.
விஐபி படத்தில் நண்பர்கள் பிரபுதேவா அப்பாஸ். ரம்பா இவர்களுடன் நடித்தது எல்லாமே என் அதிர்ஷ்டம்தான் . என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்.
இவ்வாறு சிம்ரன் தெரிவித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel