கொல்கத்தா :
பா.ஜ.க. வெற்றிபெற்றால் விவேகானந்தரும், தாகூரும் கட்டிக்காத்த பாரம்பரியம் மிக்க வங்காள வரலாறு நிலைக்குமா என்பது கேள்விக் குறியாவதோடு, வங்காளி அல்லாத ஒருவரை முதல்வராக நியமித்து டெல்லியில் இருந்து ஆட்டிவைப்பார்கள் என்றும்.
அதோடு, மத, இன நல்லிணக்கம் எனும் வங்காள கலாச்சாரம் அடியோடு சீரழிந்துவிடும் என்று மம்தா பானெர்ஜீ-யின் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு பக்கமும்.
மம்தா மீண்டும் வெற்றிபெற்றால் அது அடியாட்களின் கூடாரமாக இருக்கும், பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் துன்பப்பட நேரிடும், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவே முயற்சிப்பார்கள், என்று பா.ஜ.க. கூறிவருகிறது.
இந்த இரண்டு கருத்துகளும் எதிர் எதிர் நிலைகளில் இருந்து சொல்லப்பட்டாலும், மக்களிடையே எவ்வளவு ஆழமாக பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சியிடயே நடக்கும் இந்த போட்டியில், வங்காளத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவை மையப்படுத்தி தேர்தலை சந்திக்க இந்த இருகட்சிகளும் தயாராகி கொண்டிருக்கிறது.
அதேவேளையில், மம்தா பானெர்ஜீ-க்கும் அமித் ஷா-வுக்கும் இடையில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் யார் என்பதை உணர்த்தும் தேர்தலாகவே இது இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
பா.ஜ.க.வின் தேர்தல் சூத்திரதாரியான அமித் ஷா, திரிணாமூல் காங்கிரசில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆட்களை அள்ளி வருவது, சபாஷ் சரியான போட்டி என்று சொல்லுமளவிற்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சட்டமன்ற வாரியாக பா.ஜ.க. பெற்ற வெற்றி | |||
மேற்கு வங்க சட்டமன்ற தொகுதிகள் | 2016 சட்டமன்ற தேர்தல் | 2019 நாடாளுமன்ற தேர்தல் | 2019 – 16 உயர்வு / சரிவு ஒப்பீடு |
டி.எம்.சி. | 211 | 164 | -47 |
பா.ஜ.க. + | 6 | 121 | +115 |
இடதுசாரி | 33 | 0 | -33 |
காங்கிரஸ் | 44 | 9 | -35 |
இதர கட்சிகள் | 0 | 0 | 0 |
2016 சட்டசபை தேர்தலில் 294 இடங்களில் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பா.ஜ.க. 2019 நாடாளுமன்ற தேர்தலில் சட்டசபை வாரியாக கணக்கு பார்த்தால், 121 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேற்கு வங்க தேர்தல் வரலாற்றில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற கட்சியாக உருவெடுத்தது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஈட்டிய இந்த அமோக வெற்றி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில், திரிணாமூல் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் சம வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கவேண்டி இருக்கிறது என்று என்.டீ.டி.வி. செய்தி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வின் வாக்கு சதவீதம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது | ||
வாக்குகள் | 2016 சட்டமன்ற தேர்தல் | 2019 நாடாளுமன்ற தேர்தல் |
டி.எம்.சி. | 45% | 44% |
பா.ஜ.க. + | 11% | 41% |
இடதுசாரி | 27.30% | 7% |
காங்கிரஸ் | 12.30% | 6% |
இதர கட்சிகள் | 5% | 3% |
41 சதவீத வாக்குகளை பெற்று மேற்கு வங்கத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரசை விட 3 சதவீத வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது, கம்யூனிஸ்ட் கட்சி பா.ஜ.க.வை விட 7 சதவீத வாக்குகள் குறைவாக பெற்றனர்.
மிகக்குறுகிய வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளதால் இம்முறை பா.ஜ.க. கூட்டணி மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று வழக்கம் போல் பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றனர்.
இந்த கருத்து திணிப்பு கதைகளில் ஒரு திருப்பமாக, பா.ஜ.க.வின் இந்த வளர்ச்சியால், மம்தா பானெர்ஜீ-யின் திரிணாமூல் காங்கிரசை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை என்ற புள்ளிவிவரங்களும் வெளியாகி இருக்கின்றன.
பா.ஜ.க. + மிகப்பெரிய வாக்கு சதவீத உயர்வு பெற்று வரலாறு படைத்தது | |||
இந்த வாக்கு வித்தியாசம் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் சரிவால் வந்தது | |||
வாக்குகள் | 2016 சட்டமன்ற தேர்தல் | 2019 நாடாளுமன்ற தேர்தல் | 2019 – 16 உயர்வு / சரிவு ஒப்பீடு |
பா.ஜ.க. + | 11% | 41% | +30% |
இடதுசாரி + காங்கிரஸ் | 40% | 13% | -27% |
இதர கட்சிகள் | 5% | 3% | -2% |
பா.ஜ.க.வை தவிர திரிணாமுல் காங்கிரசை கடுமையாக எதிர்க்க கூடிய வேறு இரண்டு கட்சி கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ். இந்த இரண்டு கட்சிகளும், மம்தாவை கடுமையாக எதிர்க்க வரலாற்று காரணங்கள் பல இருக்கின்றன.
2019-ல் 30 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்ற பா.ஜ.க. கூட்டணிக்கு அந்த வாக்குகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட 27 சதவீத சரிவினால் கிடைத்தது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த சரிவும் ஏற்படவில்லை.
2019 நாடாளுமன்ற தேர்தலை விட சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி வாய்ப்பு கிட்டுமா | |||
2019 தேர்தலை விட 2% கூடுதல் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு தேவை | 2019க்கு பிறகு பா.ஜ.க.+ | வெற்றி வாய்ப்பு | |
பா.ஜ.க. | டி.எம்.சி. | ||
2019 ல் பெற்ற அதே வாக்குகளை தக்கவைத்துக் கொண்டால் | 0% மாற்றம் | 121 | 164 |
2019 ஐ விட பா.ஜ.க.+ 1 சதவீத வாக்கு கூடுதலாக பெற்றால் | +1% மாற்றம் | 135 | 150 |
2019 ஐ விட பா.ஜ.க.+ 2 சதவீத வாக்கு கூடுதலாக பெற்றால் | +2% மாற்றம் | 155 | 130 |
2019 ஐ விட பா.ஜ.க.+ 1 சதவீத வாக்கு குறைவாக பெற்றால் | -1% மாற்றம் | 110 | 175 |
2019 ஐ விட பா.ஜ.க.+ 2 சதவீத வாக்கு குறைவாக பெற்றால் | -2% மாற்றம் | 94 | 191 |
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க, பாராளுமன்ற தேர்தலில் உழைத்ததை விட கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசம் பா.ஜ.க. வின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக அமையும்.
2019 க்காட்டிலும் இரண்டு சதவீதம் கூடுதலாக பெரும் பட்சத்தில் இழுபறியாகவே பா.ஜ.க. 155 இடங்களிலும் திரிணாமுல் 130 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், பா.ஜ.க. வாக்குவங்கியில் இரண்டு சதவீத சரிவு ஏற்பட்டால், அக்கட்சிக்கு 100 இடங்களும் திரிணாமுல் கட்சிக்கு 191 இடங்களும் பெற்று திரிணாமுல் அமோக வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.
இந்த 2 அல்லது 3 சதவீத வாக்கு வித்தியாசம் மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. வுக்கு சாதகமாக அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சரிவை சந்தித்து வருகிறது என்ற வேதனையான உண்மை இந்த நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்கள் | |||
2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | நாடளுமன்றம் Vs சட்டமன்றம் | |
மகாராஷ்டிரா | 51% | 42% | -9% |
அக்டோபர் 2019 | |||
ஹரியானா | 58% | 37% | -22% |
அக்டோபர் 2019 | |||
ஜார்கண்ட் | 55% | 33% | -22% |
டிசம்பர் 2019 | |||
டெல்லி | 57% | 40% | -17% |
பிப்ரவரி 2020 | |||
பீகார் | 49% | 38% | -11% |
நவம்பர் 2020 | |||
சராசரி | 52% | 39% | -13% |
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் -9 சதவீதம் முதல் -22 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது பா.ஜ.க. இதில் 5 பெரிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் சராசரியாக 13 சதவீத சரிவை சந்தித்துள்ளது, இது பா.ஜ.க. விற்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன் 5 பெரிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் கூட சராசரியாக 17 சதவீத சரிவை பா.ஜ.க. சந்தித்தது, இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் 2019 தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது, இது கடந்த மூன்றாண்டுகளாக மாநில தேர்தல்களில் பா.ஜ.க. சரிவை சந்தித்து வருவதையே உணர்த்துகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓர் ஆண்டு முன் நடந்த சட்டமன்ற தேர்தல் | |||
2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | நாடளுமன்றம் Vs சட்டமன்றம் | |
சட்டிஸ்கர் | 51% | 33% | -18% |
மே 2018 | |||
கர்நாடகா | 53% | 36% | -17% |
மே 2018 | |||
மத்திய பிரதேஷ் | 58% | 41% | -17% |
நவம்பர் 2018 | |||
ராஜஸ்தான் | 61% | 39% | -22% |
டிசம்பர் 2018 | |||
தெலுங்கானா | 20% | 7% | -13% |
டிசம்பர் 2018 | |||
சராசரி | 51% | 34% | -17% |
மக்களவை தேர்தலுக்கு முன்னும் பின்னும் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் முறையே 17 மற்றும் 13 சதவீத சரிவை சந்தித்த பா.ஜ.க. மக்களவை தேர்தலில் மோடியின் வாய்ஜாலக்கில் வெற்றிபெற்றது என்பதே முதன்மையான காரணமாக உள்ளது.
இரண்டாவதாக, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற மனநிலையில் மக்கள் உள்ளதையே உணர்த்துவதாக உள்ளது. தங்கள் மாநிலத்தில் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அரசுகள் அமைவதை மக்கள் விரும்பவில்லை என்பதையும் காட்டுகிறது. மேலும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது சட்டமன்ற தேர்தலில் அதிக சதவீத மக்கள் வாக்களிக்கின்றனர்.
மாநில உரிமைகள், மாநில கட்சி, மாநில தலைவர்கள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது, இது கூட்டாட்சி முறையையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை காட்டுவதாகவே உள்ளது.
நாட்டில் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில், மத்திய அரசின் தயவால் நடைபெறுகிறது அனைத்தும் மத்திய அரசின் உடமை என்ற பா.ஜ.க.வின் எதேச்சாதிகார மனப்பான்மையே இந்த நிலைக்கு காரணம் என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதுவே, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான அந்த 3 சதவீத வாக்குகள் பா.ஜ.க. வுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு காரணமாக உள்ளது.
நிறைவாக, இந்த 3 சதவீத சரிவு ஒருவேளை இரட்டிப்பானால் கடந்த 10 சட்டமன்ற தேர்தலில் சந்திக்காத ஒரு படுதோல்வியை பா.ஜ.க. சந்திக்க நேரிடும் அதேநேரத்தில், மேற்கு வங்க அரசியலில் பா.ஜ.க. என்ற கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும்.
– நன்றி : என்.டீ.டி.வி.