ஜெனிவா: போலியோ வைரஸ் அவசரகால தடுப்பு மருந்துக்கு அனுமதியளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்(). கொரோனா விரைவாக பரவிவரும் நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், உலகளவில், பாகிஸ்தான் & ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே போலியோ வைரஸ் உள்ளது. அதேசமயம், பல நாடுகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதால், அங்கெல்லாம் அந்தப் பாதிப்பு இல்லை.
மனித முயற்சியால் அழிக்கப்பட்ட வைரஸ் பட்டியலில் போலியோ வைரஸும் ஒன்று.1988-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் போலியோ நோயாளிகள் இருந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெறும் 175 நோயாளிகளே போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டு பலர் குணம் அடைந்தனர்.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் பயோபார்மா பிடி மருந்து நிறுவனம் தயாரித்த போலியோ அவசர தடுப்பு மருந்து, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.