லண்டன்
கரன்சி நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையைச் செய்ய உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் இருந்து தொடங்கி தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று பலரையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் நிலை கட்டுக்கு மீறி காணப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த வைர்ஸ் பரவுவதைத் தடுக்க தொடர்ந்து பல அறிவுரைகளை இந்த அமைப்பு அளித்து வருகிறது.
நேற்று லண்டனில் இந்த அமைப்பின் அதிகாரி ஒருவரிடம் செய்தியாளர்கள் கரன்சி நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா எனக் கேட்டனர். அதற்கு அவர், “ஆம். அவ்வாறு பரவ வாய்ப்புள்ளது. கரன்சி நோட்டுக்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அடிக்கடி மாறி வருகிரது. இந்த நோட்டுக்கள் மூலம் அனைத்து விதமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே கூடியவரை மக்கள் கரன்சி இல்லா பரிவர்த்தனை அதாவது ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் ஒவ்வொரு முறை கரன்சி நோட்டுக்களை தொட்ட பிறகும் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும். அத்துடன் அதே கைகளைக் கொண்டு முகத்தைத் தொடக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து செய்டி தொடர்பாளர், “மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் அளவுக்கு கரன்சி நோட்டுக்களிலும் இருக்கும். அதாவது கைப்பிடிகள், கதவுகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளிலும் இந்த வைரஸ் இருக்கலாம். ஆகவே மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]