நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரம் உடைந்து விபத்து ஏற்பட்டது. ரெயில் உடனே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
கோரக்பூர் யஸ்வந்த்நகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை நாக்பூர் அருகே கலமேஷ்வர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரெயிலின் இரும்பு சக்கரம் ஒன்று உடைந்து நொறுங்கியது. இதன் காரணமாக ரெயில் ஆடியதை தொடர்ந்து உடனoயாக ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்துடன் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.
இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே காயம் அடைந்தார். ரெயில் நிலையம் அருகே ரெயில் மெதுவாக சென்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பீகாரில் ரெயில் பெட்டிகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு 6 பேர் காயம்
பீகாரில் இன்று சீலாத ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயில் பெட்டியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த கல்வீச்சில் பயணிகள் 6 பேர் காயமடைந்தனர்.
பீகாரில் உள்ள மான்புர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கயா ஸ்டேஷனில் ரெயில் பெட்டியின் கண்ணாடி மாற்றப்பட்டது.