டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒவ்வொரு டோஸ்-க்குபிறகு எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் 1,1 கோடி பேருக்கு கோவாக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 93லட்சத்து 56ஆயிரத்து 436 பேருக்கு முதல் டோஸ் மருந்தும், 2வது டோஸ் 17லட்சத்து 37ஆயிரத்து 178 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இதில் கோவாக்சின் முதல டோஸ்  செலுத்தப்பட்ட 93,56,436 பேரில், 4208 பேருக்கு அதாவது 0.04% பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 2வது  டோஸ் செலுத்தப்பட்ட பிறகும் 695 பேருக்கு அதாவது  0.04% பேருக்கு மீண்டும் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொவிஷீல்டு தடுப்பூசி முதல்டோஸ் எடுத்துக்கொண்ட 10,03,02,745 பேரில், 17,145 பேருக்கு, அதாவது 0.012 சதவிகிதம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 2வது டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 5014 பேருக்கு அதாவது 0.03% பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 0.04 சதவிகிதத்தினரும், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 0.03 சதவிகிதத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.