சென்னை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்த்தில் நடந்தது தொடர்பாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை அமைந்தகரையில், பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று டைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய  மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி என்ற பெயரில் தரங்கெட்ட செயல்களை அனுமதிக்க முடியாது.

வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமை கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், நான், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என்றவர்,.  தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, சலாம் போடவும் முடியாது, தனித்து போட்டியிடவே விருப்பம் என்று கூறினார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது.

இதையடுத்து பேசிய துணைத்தலைவர் நாராயணன்,  ‘தலைவர், தான் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்; மாநில நிர்வாகிகளை இப்படி அடிக்கடி உளறி குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது. வார் ரூம் பிரச்சனையால் இப்போது கட்சியில் பல குழப்பங்கள் இருக்கிறது. இதில் இந்த மாதிரி பேசுவது தலைவருக்கு அழகல்ல” என்று பேசியுள்ளார்.

அப்போது பல அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் திருப்பதி நாராயணனை ‘பேசாதே உட்காரு ‘ என்று கோஷமிட்டுள்ளனர். இதனால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய வானதி,   “தேசிய‌கட்சியான பாஜக, கூட்டணி முடிவுகளை தலைமையகத்தில் தான்‌ முடிவு செய்யமுடியும். அதனால் கோர் கமிட்டியில் பேச வேண்டியதை நிர்வாகிகள் கூட்டத்த்தில் பேச வேண்டாம்.  இது என்ன வார் ரூம் மீட்டிங்கா?” என கடுமையான வார்தைகளால் அறிவுரை கூறியுள்ளார்.

உடனே அண்ணாமலை ஆதரவாளர்கள், வானதிக்கு  எதிராகவும் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் பேசிய கரு.நகராஜன், அண்ணாமலை எந்த காரணத்திறகாகவும் ராஜினாமா போன்ற முடிவுகள் குறித்து பேச கூடாது என  கூறியதுடன்,  அண்ணாமலை யின் எண்ணத்தை நிறைவேற்ற பாஜக தொண்டர்கள் போர்ப்படை வீரர்களாக உள்ளனர்.‌ வார் ரூம் இருக்கிறது. இங்கு உங்களை எதிர்த்து பேசிய தலைவர்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். வேறு எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது என‌ கூறியுள்ளார்‌.

உடனே சிலர்,, “உன்னால் தான் அனைத்திற்கும் பிரச்சனை, நீ பேசக்கூடாது உட்கார்” என சப்தம் போட்டிருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து கூட்டத்தை உடனே முடித்துவிட்டு அனைவரும் கிளம்பியதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்! அண்ணாமலை நேரடி மிரட்டல்…