கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தல் தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரகள் இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.

மேற்கு வங்க சட்டசபை தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரிகளும், காங்கிரசும் அறிவித்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விட்டன.

அதன்படி எதிர்வரும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இருதரப்பு கட்சி தலைவர்களிடையே 3ம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.