கொல்கத்தா
மேற்கு வங்க மாநில பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. மேலும் அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன.
கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பிருத்விராஜ் நஸ்கார் என்ற அந்த நபர் பணியாற்றி வந்துள்ளார். அவரது கொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றச்சாட்டை தெரிவித்துள்ள்ற்ஊ. பாஜக மாநில தலைவர் சுகந்த மஜும்தார் செய்தியாளர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நஸ்கார் கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி கூவருகையில் காவல்துறையினர் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணை விசாரித்ததில் தனிப்பட்ட பகைக்காக படுகொலை செய்யப்பட்டு உள்ளார் எனவும் நஸ்காரை ஆயுதம் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கூறியதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா நகரில்ஆர்.ஜி. கார் மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் துர்கா பூஜையின்போது, போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததற்காக அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்தனர் என நஸ்காரின் தந்தை கூறியுள்ளார்.