மேஷம்
மத்தவங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா நல்லதுங்க. பண நெருக்கடியால் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும் சூழ்நிலை உருவானாலும் கடைசி நிமிஷத்தில் ஏற்பாடு செய்து சமாளிச்சுடுவீங்க. விரயங்களிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்குங்க. முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்துடுங்க. வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னா அது ஒண்ணுதான் நம்மால முடியாத விஷயம், என்ன செய்ய? குறிப்பா அண்ணன் தங்கை அக்கா தம்பின்னா தடாலடியா எடுத்தேன் கவிழ்த்தேன், ஏதோ எல்லாரும் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போறாங்களோ பிழைச்சீங்களோ. போதும் நிப்பாட்டிக்குங்க. டாடி மூலம் பெரிய நன்மை ஒண்ணு கிடைக்கப்போதுகு. நீங்கதான் எப்பவுமே அவர் செல்லமாச்சே.
ரிஷபம்
உங்களுக்கு எங்கேயிருந்தோ திடீர்னு இத்தனை காலம் இல்லாத நல்ல பலன்கள் வந்து சேரும். நிதி நிலைமை திருப்தியா இருக்கும். அது நிம்மதி தரும். பெண்களால் நன்மை உண்டுங்க. உதிரி வருமானங்கள் அங்கே இங்கே கிடைச்சுடும். எடுத்த காரியம் ஈஸியா முடியும். மாமன், வகை ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். மனசில் நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கறது நல்லதுங்கப்பா. குறுக்கு வழியில் சம்பாதிக்கவோ … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் ஆலோசனை கூறினால் அவர்கள் இருக்கும் திக்கைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு உங்க மனசாட்சியின் பேச்சுக்கு மட்டும் காதைக் கொடுங்கள், இல்லையென்றால் சிரமப்படப்போவது யாருன்னு நான் சொல்லவும் வேண்டுமோ?
மிதுனம்
குழந்தைங்களோட திருமண முயற்சி கைகூடும். உற்சாகத்துடன் வேலை பார்ப்பீங்க. சகோதர ஒற்றுமை நல்லாயிருக்கும் அவங்க உதவி செய்வாங்க. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். வீடு மாற்றம் நாடு மாற்றம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு குறையலாம். வேளை வந்துடுச்சு.. வேலைக்கும் மாலைக்கும் சேர்த்து ஒரு சேர நேரம் வந்துவிட்டது. அம்மாவின் உடல் நிலையின் மேல் நிறைய அக்கறை வைக்கணும்மா. புது வீடு/ ஃப்ளாட் வாங்கப் போறீங்க, கங்கிராட்ஸ். வேலை மாற எண்ணம் இருந்தால் அவசரம் வேணாம். யோசிச்சு டிஸைட் பண்ணுவது நல்லது. காதல் வலையில் கால்வைத்துச் சிக்க வாய்ப்பிருக்கு.
கடகம்
மனநிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்க குரலுக்கு செவி சாய்ப்பர். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளை நெறிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீங்க. எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுகள் இந்த வாரம் முடிவாகும். பெண்கள், பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீங்க. செலவு அதிகமாயிருக்கும்தான்.. ஆனால் வருமானமும் கூடுதலாகப்போகுதேங்க. அலுவலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடும்படி ஆடிட்டிங் முடியும். கடன் கிடன் என்று இப்போதைக்கு எதிலும் இறங்க வேண்டாம். லோன் மனு எதிலும் கையெழுத்து கைநாட்டு என்று ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு அப்புறம் புலம்பாதீங்க, ஆமாம், சொல்லிட்டேன்.
சிம்மம்
தந்தை வழி ஆதரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். வெளி மனிதர்கள்கிட்ட கொஞ்சம் கவனமாக செயல்படணுங்க. மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதுசிறப்பாக நடைபெறுமா என்பது சந்தேகம்தான். அல்லது அவ்வப்போது கவனிச்சுக்கிட்டே இருக்கணுங்க. அதைவிட நீங்களே செய்துடலாம். பழைய கோப தாபங்கள் மறைஞ்சு மனசில் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நண்பர்கள்கிட்ட பழகுவீங்க. ரொம்ப ரொம்ப அழகான வாகனம் அமையுமுங்க. உங்க கனவு அப்பிடியே கண்முன்னால நிஜமாயிடுச்சில்ல? என்ஜாய். டாடியோட எப்பப்பார்த்தாலும் சண்டை வலிக்காதீங்களேன். உங்களுக்கும் அவர் வயசாகும்போதுதான் புரியும். புதிய வேலை தேடவேண்டாம். இருக்கும் வேலையில் நல்ல பெயர் எடுக்கப்பாருங்க, அதை நம்பி இதை விட்டுடாதீங்க. ப்ளீஸ். ஜாலியான வாரம் என்பதை மறுப்பதற்கில்லை.
கன்னி
பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய வாரம். இடமாற்றம் இனிமை தரும். மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் தகவல் இந்த வாரம் வரலாம். திடடமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணத்தட்டுப்பாடு அகலும். நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். யம்மா .. யம்மா.. லக் என்றால் லக் இதுவல்லவோ அதிருஷ்டம். நாலா பக்கத்திலிருந்தும் பணமென்ன பாராட்டென்ன.. நல்லது.. நல்ல வகையில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கறீங்க. பாராட்ஸ். மனதில் மென்மையும் கனிவும் கருணையும் அதிகரிக்கும். நன்மை செய்து புகழ் வாங்குவீங்க. 30 வயசைத் தாண்டியவங்களாய் இருந்தால் வாழ்வின் வெற்றிக்கான படிகளில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க. உங்க பேச்சினால் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் எற்படப்போகின்றன. அப்படியே நேர் எதிராகவும் ஒன்றிரண்டு நிகழக்கூடும்
துலாம்
இதுவரை மனம் மாறாமல் இருந்த மேலதிகாரிங்க, இப்பொழுது உங்க குரலுக்கு செவிசாய்ப்பாங்க. பிள்ளைகள் வழியில் கொஞ்சம் செலவுகள் ஏற்படலாம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொடுத்த தொகையால் லைட்டா பிரச்சினைகள் வரலாம். நீங்க எப்பவுமே உங்க கை ஓங்கணும்னு நினைச்சுக்கிட்டுக் குரலை உயர்த்தினா அது நியாயமே இல்லீங்க. அனுசரிச்சுப் போங்க. வாழ்க்கை இனிமையாகும். சற்றே வார்த்தைகளை கவனத்துடன் பிரயோசித்தால் பிரச்சினையே நேராது. ஓ.கே? உடன் பிறந்த பிறப்புக்களோட சண்டை.. போர்.. லடாய்.. டிஷ்யூம் எதுவும் வேண்டாம். குறிப்பா கேஸ் எதுவும் போட்டு கீட்டு வெக்காதீங்க. கண்டிப்பா அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடை மேல் ஏற்றிக் கைதட்டுவாங்க. நீங்க புத்திசாலி என்று எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தாச்சுங்க.
விருச்சிகம்
களைப்பை அகற்றி உழைப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் ஆலோசனை தக்கவிதத்தில் கைகொடுக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும். கணவரும் குழந்தைங்களும் நிம்மதியா இருப்பாங்க. அது உங்களுக்கு சந்தோஷம் குடுக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி உண்டு. வார்த்தைகளை கவனிச்சு கவனிச்சு ரிலீஸ் பண்ணுங்க. டாடியை நல்லாக் கவனிச்சுக்குங்க. புது வேலை தைரியமாத் தேடலாம். ஆனா இன்னிக்கு மனுப்போட்டா இன்னிக்கே சேருவீங்கன்னு கற்பனை செய்துக்க வேணாம். எல்லாத்துக்கும் நேரம் காலம் வரும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.
தனுசு
நண்பர்கள் எப்போதும்போல இந்த வாரமும் உதவியா இருப்பாங்க. வேலைகளை உடனுக்குடன் முடிச்சு நிம்மதி காண்பீங்க. பல காலம் தொடர்பு விட்டுப் போயிருந்த நண்பர்களும், உறவினர்களும் வலிய வந்து பேசுவாங்க. உங்களைப் பகைச்சுக்கிட்டிருந்தவங்க வெள்ளைக்கொடி காட்டுவதோடு, உங்களைப்போல உண்டான்னு கையை நீட்டிக்கிட்டு வருவாங்க. கைகூப்பி சேர்த்துக்குங்க. பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். கடனுக்கு பொருள்களை விற்றாலும் வாங்கினாலும் எச்சரிக்கை தேவை. உத்யோகத்துல இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். படபடக்காமல்.. கோபத்தை அடக்கி, நிதானமாப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
மகரம்
குடும்பத்துக்குள்ள இருந்துக்கிட்டிருந்த பிரச்சினைங்க நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீங்க. சுப காரியங்கள் பல, இல்லத்தில் நடைபெறும். மம்மியின் உடல்நலம் சீராகும். பகையை வெல்வீங்க. தொழில் புரிபவர்களுக்கு, பணியாளர் தொல்லை அகலும். உங்களை ராத்திரியும் பகலுமாய்ப் பயமுறுத்திக்கிட்டிருந்த ஆரோக்யப் பிரச்சினையெல்லாம் போயே போச். ரைட்டா? தேவையில்லாமல் கோபமும் வேண்டாத இடத்துல தைரியமும் வந்தால் அதுக்கெல்லாம் குட்பை சொல்லிடுங்கப்பா. ஹஸ்பெண்டுக்கு வங்கிக் கணக்கில் டிஜிட்ஸ் கூடும், கொஞ்சம் தெனாவெட்டாத்தான் பேசுவார், கண்டுக்காம விடுங்க, தானா இறங்கி வருவாரு. மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் பிசினஸ்/ தொழில்ல கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
கும்பம்
அடேயப்பா.. அதிருஷ்டம் டெர்ரஸைப் பிச்சுக்கிட்டக் கொட்டப் போகுது பார்த்துக்கிட்டே இருங்களேன். வரவுக்கு மேல் வரவு..லாபத்துக்குமேல் லாபம்.. செம.. ஆனால்… ஆரோக்யத்தை மட்டும் கிள்ளுக்கீரை மாதிரி அலட்சியப்படுத்திக்கிட்டிருக்கீங்களே.. நியாயமா? குடும்பத்தில் யாருக்கேனும் மெடிகல் செலவு வர்க்கூடும். எனினும் உங்களுக்கு முன்யோசனை அதிகம். காப்பீடும் இருக்கும். மனசும் ரெடியாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. பழைய நட்புகளைப் புதுப்பிப்பீங்க. கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீங்க. வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீங்க.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 6 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
மீனம்
புது வேலை கிடைக்கும், அல்லது கிடைச்சிருக்குமே? சிஸ்டர் அல்லது பிரதர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி இ மெயில் பண்ணுவாங்கம்மா. டாடியோட ஃபைட் சீன் முடிஞ்சாச்சா? மம்மி சப்போர்ட் நிறைய இருக்குமே? டாக்டர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கட்டம் சம்பந்தமான லாபம் எதிர்பாத்திருந்தவங்களுக்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ்/ தொழில்ல இருக்கறவங்களுக்கும் வீடு வாங்க விக்கறவங்களுக்கும் லாபம்ஸ் உண்டு. இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் பிசினஸ்/ தொழில்ல வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீங்க.