மேஷம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் ஹாப்பி செய்தி வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவாங்க.  குடும்ப ஒற்றுமை பலப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். மம்மி டாடியின் ஆதரவு நல்ல விதத்தில் கிடைக்கும். புதிய வேலையில் ஆர்வம் காட்டுவீங்க. ஆபரணச் சேர்க்கை உண்டு. வழக்குரைஞர்கள் சிறப்பாக தொழில் செய்வாங்க. மருத்துவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கட்டுமான தொழிலில் கணிசமான லாபம் கெடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வந்து பொருளாதார சிக்கலை தீர்க்கும். திடீர் பணவரவால் தெற்கு முக்காடி போவீங்க. வாழ்க்கையிலும் தொழிலிலும் மிக சிறப்பான மாற்றத்தை எதிர் நோக்குவீங்க. எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் ஏற்றத்தை காண்பீங்க. எஸ்ப்பெஷலி ஃபேமிலியில் சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்

எதிரிங்க பொறாமைப்படற அளவுக்குத் தொழில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பரந்த மனப்பான்மையால் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும் பல வகைகளில் வியூகம் அமைத்து வியாபாரத்தை பெருக்குவீங்க. வங்கியில் உங்கள் கையிருப்பு அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களால தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களை பெறுவீங்க. அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பாங்க. தனியார் துறை ஊழியர்களும் கணிசமான பலனை பெறுவாங்க. மாணவர்களின் அக்கறை ஆசிரியர்களையும் பெற்றோரையும் பெருமைப்பட வைக்கும். கட்டுமான தொழிலில் புதிய அத்தியாயம் படைப்பீங்க. விவசாயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவீங்க. பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். விருந்து நிகழ்ச்சிகளால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி களை கட்டும். உங்க பழைய பொறுமைக்கெல்லாம் ரிவார்ட் கெடைக்கப்போகுதுங்க.

மிதுனம்

மாணவர்கள் நிறைவைக் காண்பீங்க. எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். தொழில் வெற்றியாகும். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். நீங்க எதிர்பார்த்த அளவுக்கு நிலைமை சீரடைய இன்னும் சில வாரங்கள் ஆகும். டோன்ட் ஒர்ரி. அப்புறம் இரட்டிப்பு நன்மைகள்தான். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உடல் நலக்கோளாறுங்க சரியாப்போகிற வாரம் இது. நீங்க பிஸினஸ் செய்யறவா? எனில் பார்ட்னர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் அடைவீங்க. புதிய சொத்துக்கள் வாங்குவீங்க. வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்ட ஏற்பாடு செய்வீங்க. பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேர்ப்பீங்க. அப்பா அம்மாவோட ஆசீர்வாதத்தால, நீண்ட நாளாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீங்க.

கடகம்

உத்தியோக முயற்சி கைகூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவாங்க. பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் உள்ளவங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஹாப்பியா இருப்பீங்க.  பெரிய மனிதர்கள் கனெக்ஷன் கிடைக்கும். அலைச்சல், மனக்குழப்பம் அதிகரிக்கும். நேர்மறை சிந்தனையை வளர்த்துக்குங்க. ஆபீசில் முன்னேற்றம் வர ரொம்பவும் பாடுபட வேண்டியிருக்கும். கடைசில வெற்றி பெறுவீங்க. பழைய வீட்டை புதுப்பித்து பெயின்ட் அடிச்சு.. அலங்காரம் செய்வீங்க. தொழிலை விருத்தி செய்ய அதிக முதலீடு செய்வீங்க. வசீகரமாகப் பேசி வாடிக்கையாளர்கள் மனசுல இடம் பிடிப்பீங்க. அரசு ஊழியர்களின் வேலை திறனை மேலதிகாரிகள் உற்சாகமாக பாராட்டுவாங்க. தனியார் துறை ஊழியர்களும் அலட்சியம் காட்டாமல் வேலை பார்த்து உற்பத்தியை பெருக்குவாங்க. உணவுக்கடை சிறப்பாக நடக்கும். துணி வியாபாரம் அமோகமான லாபத்தை கொண்டு வரும்.

சிம்மம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்குமுங்க. தொழிலில் இருந்த தொல்லை அகலும். நேற்று பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் தானாக நடைபெறுங்க. பயணங்களும், அவற்றால் ஆதாயமும் உண்டு. அரசியல்வாதிகளின் சந்திப்பு தொழிலுக்கு உதவிகரமாக அமையும். அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீங்க. தோப்புக் குத்தகையில் வருமானத்தை பெருக்குவீங்க. விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை தரும். எதிர்ப்புகளை முறியடிப்பீங்க. வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீங்க. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் பதவி உயர்வு அடைவாங்க. சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் கூட சில நேரங்களில் கடுகு சைஸ் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க.

சந்திராஷ்டம தினங்கள் :  ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை

சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.  

கன்னி

நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் ஒன் பை ஒன்னாக  நடைபெறும். சொத்துப் பிரச்சினை ஒரு வழியா முடிவுக்கு வரும். அடகு நகையை மீட்கப்போறீங்க பாருங்க. ஹாப்பியான விஷயங்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் அமையலாம். எதுக்கும் கொஞ்சம் முன் யோசனையுடன் செயல்படுங்க. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் சூழ்நிலை ஏற்படும். எச்சரிக்கையாக இருந்து வியாபாரத்தில் வெற்றியை காண வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீங்க. எதிர்பாராத பண வரவால் பழைய கடனை அடைப்பீங்க. தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்ட திட்டம் தீட்டுவீங்க‌. வங்கி கடனுக்கு அப்ளிகேஷன் போடுவீங்க. அதற்கான நல்ல பதிலையும் பெறுவீங்க. வியாபாரத்தில் பிடிவாதமாக நின்று வெற்றியை காண்பீங்க. விரக்தி மனப்பான்மை யாரால் எதனால் வந்தாலும் அனுமதிக்கவே செய்யாதீங்க. ரொம்ப சீக்கிரத்துல நிமிர்வீங்க.

சந்திராஷ்டம தினங்கள் :  ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை

சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள். 

துலாம்

மகிழ்ச்சி ஜாஸ்தியாகும். புதிய நண்பர்கள் மூலம் லாபம் பொருளாதார நிலை உயர வழிவகுத்துச் கொள்வீங்க. காஸ்ட்லியாகும்னு நினைச்ச விஷயம் ஒண்ணு குறைஞ்ச செலவில் முடிவிற்கு வரும். உல்லாசப் பயணம் போவீங்க. ஒருசிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும். உத்யோகம் பாக்கற எடத்துல.. அலுவலகத்துல. மேலதிகாரிங்க உங்க திறமையைப் பார்த்துப் பாராட்டுவாங்க. வரவுக்கு ஏற்ற செலவுகள் வரும் என்றுதான் பொதுவாகச் சொல்லக் கேட்டிருக்கோம். உங்க விஷயத்துல அப்டியே ஆப்போசிட். செலவை இட்டு நிரப்பற மாதிரி வரவு வரும்.. திட்டமிட்டு காரியம் செய்தால் நல்ல லாபத்தை பெறலாம். மருந்து வியாபாரிகள் புதிய உச்சத்தை எட்டுவாங்க. வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் பெரும் புகழடைவாங்க. கலைத்துறையினர் புதிய சாதனை படைப்பாங்க. குடும்பத்துல அமைதியும் சந்தோஷமும் நிலவும்.

சந்திராஷ்டம தினங்கள் :  ஜூலை 2 முதல் ஜூலை 4 வரை

சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள். 

விருச்சிகம்

அனைத்தும் நல்லவிதமாக நடைபெற வழிபாடு உங்களுக்கு ரொம்பவும் உதவி புரியும். நட்பால் நன்மை கிட்டும். ஆரம்பத்தில் அச்சறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளி உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது நல்லதுங்க. இல்லாதவங்களுக்கு உதவி செய்வதன் மூலமாக உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீங்க. மனைவி மக்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வீங்க. புதிய ஆர்டர்களை பெறுவதற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீங்க. அலைச்சல் அதிகமாகி உடல் சோர்வு உண்டாகலாம். கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீங்க. தொழிலில் ஏற்றமும் மாற்றமும் காண்பீங்க. பொருளாதார முன்னேற்றத்தால் எதிர்கால பயம் மனசை விட்டு ஒரு வழியா அகலும். ஹப்பாடா.

தனுசு

எதிர்பாராத விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. புதிய நண்பர்களிடம் அதிகமாக நெருக்கம் காட்டாதீங்க. பெண்களின் குணம் அறிந்து பழகுங்க. சீற வேண்டிய நேரத்துல மனம் இறங்கி, அதைத் தள்ளிப்போடுவீங்க. நண்பர்களின் உதவியால் சில நல்ல காரியங்களைச் செய்வீங்க.  மனசுல பட்டதை வெளியில் கொட்டி விடுவீங்க. அதனால் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக சான்ஸ் இருக்கு. எனவே பேசும்போது கேர்ஃபுல்லாப் பேசுங்க. மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவாங்க. வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும். தள்ளிப்போன திருமணங்கள் சொல்லி வைத்த மாதிரி நடக்கும். குடும்பத்துல மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். முகநூல் பெண் நண்பர்களிடம் ரகசியங்களை வெளிப்படுத்தாதீங்க. அது தேவையில்லாத அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும்

மகரம்

எதிலயும் முன் யோசனையோட செயல்படுங்க. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அனைத்தும் நல்லவிதமாக நடைபெறணும்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க போதும். குழந்தைங்க பற்றி .. குறிப்பா அவங்க மார்க் பற்றி சற்று டென்ஷன் இருக்கும்தான். ஆனால் அது டெம்ப்ரரி டென்ஷன் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. எல்லாம் சரியாகப்போகுது. விரயங்கள் இருக்கும்தான். அதுக்காக டென்ஷன் ஆவுற அளவுக்கு இருக்காது வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் கொஞ்சம் தள்ளிப்போகுமுங்க. கொடுத்த வாழ்க்கை காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருப்பீங்க. வண்டி வாகனங்களில் போகின்ற பொழுது கவனச் சிதறல் கூடாது. அவசியம் ஹெல்மெட் போட்டுக்குங்க. வேகமாப் போக வேணாம். ஆன்மீகப் பெரியவங்களோட நட்பு கிடைக்கும். ஆலய வழிபாடுகள் செய்வீங்க. கெட்ட பெயர் ஏற்படாமல் எந்த காரியத்தையும் செய்துடுவீங்க. எனவே நோ பிரச்னை.

கும்பம்

மாற்றங்களால் ஏற்றம் உண்டாகுமுங்க. இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வழி கண்டுபிடிப்பீங்க. பழைய பிரச்னை ஒண்ணு நல்ல முடிவிற்கு வரும். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். அவசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய வாரமுங்க. ஆரோக்கியத் தொல்லை உண்டு. சேமிப்புகள் கரையலாம். உதவி செய்வதாய் சொன்னவங்க கடைசி நேரத்துல கையை விரிக்கக்கூடும். அதுக்கெல்லாம் அசந்துபோறவரா நீங்க? எந்த விஷயத்தில் தடை தாமதம் வந்தாலும் அதுலேயிருந்து விடுபட்டு வெற்றி காண்பீங்க. திருமணத் தடை அகலும். எல்லா விஷயங்கள்லயும் கொஞ்சம் அதிகமா முயற்சி தேவைப்படும். அது பற்றிக் கவலை வேணாங்க. குடும்ப ரகசியங்களை வெளியில சொல்வது, பிறரை விமர்சிப்பது போன்றவற்றால் பிரச்சினை உருவாகாம கேர்ஃபுல்லா இருங்க. யாரு கிட்டேயும் உங்க ஆபீஸ் பொறுப்புகளை ஒப்படைக்காதீங்க. நல்லவங்களை இழக்கவே  செய்யாதீங்க.

மீனம்

வந்த துயரங்கள் வாசலோடு நின்னுட்டுப் போயிடுங்க. வரன்பார்த்து, பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடவில்லையேன்னு மனக்குழப்பம் அடைந்த பெற்றோர்கள் வரன்கள் திருப்திகரமான முறையில் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போறதுங்க பார்த்துக்கிட்டே இருங்களேன். பெண்கள் நிதானத்துடன் செயல்பட்டால் தான் நிம்மதி கிடைக்கும். மற்றவர்களுக்குப் ஜாமீன் போடுவதைத் தவிர்க்க வேண்டிய நேரமிது. சேமிப்புகள் கரையலாம். திடீர்த் திருப்பங்கள் அதிகரிக்கும்.  அதனால் பொருளாதாரம் முன்னேற்றம் காண்பீங்க.. மனைவி மக்கள் மனதுக்கு இதமாக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அலை பாய வேண்டிய கட்டாயம் ஏற்படும். பிள்ளைகளுக்கான கல்வி செலவு அதிகரிக்கும். . கண்ட இடத்தில் நகைகளை கழட்டி வைக்க கூடாது. பண விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்