மேஷம்

தொழில், வியாபாரத்தில் புதிய லாபங்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உற்சாகம் தரும். உத்யோகத்தில் இருந்த தேக்க நிலை மாறும். அலைச்சல் இன்கிரீஸ் ஆனா என்னங்க.. அது நல்ல பலனைக் குடுக்கப் போகுதே. ஃபேமிலியில் குதூகலம் நிறைந்திருக்கும். பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் உதவுவாங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லதுங்க. ப்ளீஸ். புதிய வேலை அல்லது பதவி உயர்வு வாய்ப்பு இருக்கும். கணவன் மனைவியிடையே கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போங்களேன். ஸ்டூடன்ட்ஸ் நல்ல மதிப்பெண் எடுப்பாங்க. எதிர்பாராத பண வரவு இருக்கும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் இருக்கும். பழைய ஃப்ரெண்ட்ஸ்னால எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. கொடுக்கல்-வாங்கல் சுமாரா இருக்கும். வாகனங்களை இயக்கும் பொழுது கொஞ்சம் நிதானிச்சுச் செய்ங்கப்பா.

ரிஷபம்

வெற்றிகள் வீடு தேடி வரும். கிடைக்கும் சான்ஸை சரியாக பயன்படுத்திக்குவீங்க. அதனால நல்ல பெயர் வாங்குவீங்க. உத்யோகம், வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். குழந்தைங்களால மகிழ்ச்சியடைவீங்க. மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்க்கணுங்க. ஃப்ரெண்ட்ஸ், உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டு. பேச்சில் எச்சரிக்கை தேவைங்க. உடல்நிலையில் சின்னச்சின்ன உபாதைங்க வந்தால் அலட்சியம் வேணாம். எதிலும் நிதானம் தேவை. கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்கணுங்க. விருந்து, விசேஷங்கள், உறவினர் சந்திப்பு, பிரயாணங்கள் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளால் சந்தோஷம் உண்டு. வாகனங்கள் பராமரிப்பு செலவு கூடும். ஆனால் அந்த வாகனம் பர்ஃபெக்டா ஆயிடும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் நடைபெறும். மனதில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிச்சுக்கணுங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி  28 முதல் ஜனவரி  31 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

நிம்மதியான கால கட்டம். வேலை பளு இருந்தாலும் மனநிறைவு இருக்கும். தொழில், வியாபாரம், உத்யோகத்தில் முன்னேற்றம் காணப்படும். தனவரவு திருப்தியளிக்கும். புதிய முதலீடுகள் பற்றி திட்டமிடுவீங்க. கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். குழந்தைங்க உடல் நலனில் கவனம் அவசியம். நோய்தொற்று, பித்தம் கபம் ஆகியவற்றால் உடல்நிலை பாதிப்படையாம உங்க ஹெல்த்தை கவனமாய்ப் பார்த்துக்குங்க. உங்க மம்மி டாடி சந்தோஷமாக இருப்பாங்க. மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைச்சுடும். உடல் நலனில் கவனம் தேவைங்க. ஓய்வு மன அழுத்தத்தை குறைக்கும். வாகன செலவுகள் உண்டு. இட்ஸ் ஓகே. உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களால் நன்மைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், உறவினர்களிடம் வீண் சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் கவனம் அவசியம். வீடு, நிலம் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கடகம்

குழந்தைங்களால சந்தோஷம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். பண வரவு நல்லா இருக்கும். வெளிநாட்லேயிருந்து வர்ற நியூஸெல்லாம் சந்தோஷம் குடுக்கும். எதிர்பாராத பரிசுப் பொருட்கள் கெடைக்கும். கணவன், மனைவி உறவு ஹாப்பியா இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீங்க. குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவீங்க. மாணவர்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவாங்க. பிரயாணங்களால் செலவுகள் கூடும். தோல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் சரியாகி நிம்மதி வரும். உறவினர்கள் வழியில் நன்மையான நியூஸெல்லாம் வரும். நிலம் , விவசாயம் சார்ந்த தொழில்கள் அபிவிருத்தி அடையும். தடைபட்டிருந்த வழிபாடுகள் நல்லபடியாக முடியும். ஃப்ரெண்ட்ஸால ஆதாயம் உண்டு. புதிய பிசினஸ் தொடங்க நல்ல நேரம்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 4 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

மனக்குழப்பங்கள் தீரும். புதிய உத்வேகம் இருக்கும். தொழில், பிசினஸ் சிறப்பா இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்துக்கிட்டிருந்த மனசஞ்சலம் தீர்ந்துடும். தேவையயற்ற வாக்குறுதிங்களைக்  குடுக்க வேணாம். ஃபேமிலியில் நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பா இருக்கும். குழந்தைகளுக்குச் சின்ன அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் வரும். திடீர்ப் பிரயாணங்களும் அதனால் ஆதாயமும் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை அல்லது வாங்குவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வீடு கட்ட, பராமரிக்க திட்டங்கள் தீட்டுவீங்க. உறவினர்கள் வழியில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கால், எலும்பு சம்பந்தமான உபாதைகளால் ஏற்பட்டிருந்த சிரமங்கள் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவைங்க.

கன்னி

சந்தோஷம் கூடும். புதிய பொருட்கள் வாங்குவீங்க. வெளிநாட்டு தொடர்புகள், பயணங்கள் உங்களை ஹாப்பியா ஆக்கித்தரும். உத்யோகம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத பிராஃபிட் கிடைக்கும். புதிய சேமிப்பில் ஈடுபடுவீங்க. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். வாழ்க்கை துணையின் சந்தோஷத்திற்காக முக்கியத்துவம் அளிக்கவும். குழந்தைகளின் சந்தோஷம் கூடும். உறவினர்கள் வருகை உண்டு.  மாணவர்கள் பொறுப்புணர்ந்து படிப்பாங்க. தெய்வ, பித்ரு கடமைகளை சரியாக செய்து வருவது அவசியம்ங்க. கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். தொண்டை, காதில் ஏற்பட்ட பாதிப்புங்க நீங்கும்.  பழைய ஃப்ரெண்ட்ஸ் உதவுவாங்க. புதிய சொத்துக்கள் வாங்க நல்ல நேரம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துடுங்க. தன வரவு திருப்தி தரும்.

துலாம்

வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகன சேர்க்கை ஏற்படும். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவீங்க. தன வரவு திருப்தி தரும். பேரன்ட்ஸ்கிட்ட விட்டுக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிடுவீங்க. குழந்தைகள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். பெற்றோருடனான அனுசரணை திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் கவன சிதறல் நீங்கி நல்ல முனைப்பு வரும். வயிறு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கிட்டு நல்லா ஆயிடுவீங்க. உத்யோகம், வியாபாரம் முன்னேற்றம் தரும். புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்ங்க. நண்பர்களிடம் ஃபைட்டிங் ஏற்படுவதை உங்களால அவாய்ட் செய்ய முடியாது. உறவினர்கள் வீட்டுக்குப் போய் ஹாப்பியா என்ஜாய் செய்வீங்க. உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டு. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைங்க. அப்பாவுடைய ஆசையை நிறைவேற்றுவீங்க.

விருச்சிகம்

விடாமுயற்சியால் வெற்றிகள் கிடைக்கும். தொழில், உத்யோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் தாமதமான வெற்றி தரும். குழந்தைங்க உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி அவங்களை நல்லா வெச்சுப்பீங்க. தன வரவு திருப்தி தரும். பழைய கடன்கள் அடைபடும். தம்பதியரிடையே ஹாப்பியான புரிதல் இருக்கும். டாடி மம்மி உடல் நிலை நல்லா இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மார்க் வாங்குவீங்க. பிரைஸ் கிடைக்கும்.  உடலில் ஏற்பட்ட பிரச்னைகளும் மனசில் வந்த டிப்ரஷனும் படிப்படியாக் குறையும். வாகன செலவுகள் சிறிய அளவில் ஏற்படும். உறவினர்கள் நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு மகிழ்வீங்க. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பிரயாணங்களால் செலவுகள் உண்டு. நிலம் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்வீங்க. அல்லது பழைய முதலீட்டால் லாபம் பெறுவீங்க.

தனுசு

புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தனவரவு நல்லா இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். வீடு கட்ட, அல்லது புதுப்பிக்க முற்படுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். புத்திர பாக்யம் வேண்டியவங்களோட கனவு நனவாகும். கணவன் மனைவியிடையே  ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவங்களுக்கு நீங்க வாலன்ட்டியராக உதவுவீங்க. குழந்தைங்க வழியில் சுப செலவுகள் உண்டு. வீட்டில் சுப காரியங்களுக்கு திட்டமிடுவீங்க. மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புங்க குறைஞ்சு ஆரோக்யம் பெட்டராகும். உத்யோகம், பிசினஸ்  சிறப்பா இருக்கும். உறவினர்கள் மூலம் செலவுகள் ஏற்பட்டாலும் அவங்களால ஆதாயமும் உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்துக்கு ஃபுல்ஸ்டாப் வைப்பீங்க. இயந்திரங்கள், வாகனம் இயக்கும் போது நிதானம் அவசியம்.

மகரம்

மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளின் போது  மௌனம் காத்து அதை முடிவுக்குக் கொண்டு வருவீங்க. திடீர் ஆன்மீகப் பயணம் இருக்கும். தன வரவு திருப்தி தரும். உத்யோகம், வியாபாரம், தொழிலில் புதிய சான்ஸ்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வீங்க. கணவன், மனைவி ஒற்றுமை கூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவைங்க. மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். நல்ல பெயர் எடுப்பீங்க. நண்பர்களுக்கு அட்வைஸ் வழங்குவீங்க. கூடப்பிறந்தவங்களுக்காக வேண்டி அலைச்சலும் செலவும் இருந்தாலும் அவங்க நன்றி உணர்ச்சியில் நெகிழுவாங்க. நீங்க குடும்ப விஷயங்களில் எதுக்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் வயிற்றில் பால் வார்க்கும்.  ஆரோக்யம் சம்பந்தமான பிரச்சனைங்க முடிவுக்கு வரும். வீடு சம்பந்தமா எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கணுங்க.

கும்பம்

உத்யோகம்/ வியாபாரத்தில் இருந்துக்கிட்டிருந்த தேக்க நிலை மாறும். தன வரவு உங்களை ஹாப்பியா ஆக்கிடும். குடும்பத்துல கருத்து வேறுபாடுகள் உங்க முயற்சியால குறையும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள்  நடக்கும். குடும்பத்தினர் உங்களை சந்தோஷப்படுத்தும்படி நடந்துக்குவாங்க. கணவன் மனைவியிடையே பரஸ்பர ஆதரவு காணப்படும். ஸ்டூடன்ஸ் படிப்பில் அதிக கவனம் செலுத்தணும்ப்பா. விருந்து விசேஷங்களுக்குப் போவீங்க. சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறினாலும் கடவுள் உங்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கொடுப்பாரு. உடல் நிலை பாதிப்படையாதபடி கவனமாய் இருங்க. பிரயாணங்களைத் தவிர்க்கணுங்க. வாகன மாற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் குறைந்த லாபம் தரும். அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். கடன் சுமை தீரும். அயல் நாட்டிலிருந்த ஹாப்பி செய்தி வரும். குழந்தைங்க உங்களைப் பெருமைப்படுத்துவாங்க

மீனம்

பயணங்கள் அனுகூலம் தரும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீங்க. போட்டியாளர்களை சமாளிக்க நேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. குழந்தைங்களால மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் இருக்கும். மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், விரும்பிய படிப்புகளில் சேர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர்கள், ஃப்ரெண்ட்ஸ் பல்வேறு வழிகளில் உதவுவர். மம்மியின் உடல் நலன் சீராக இருக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்த அப்பாடா என்றாகும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். பிரயாணத்தில் கவனம் தேவைங்க. கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். சிறிய அளவிலான புதிய முதலீடுகள் செய்வீங்க. அது லாபம் தரும். .வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் நன்மை வரும்.