மேஷம்
சாப்பிடவும் தூங்கவும் நேரம் இல்லாமல் ஓடு ஓடுன்னு ஓடுவீங்க. உழைப்பீங்க. போதாக்குறைக்குப் பயணங்கள் வேறு மேற்கொள்ள வேண்டி வரும். பெண்களுக்கு கர்பப் பை சம்பந்தமான சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுங்க. பெரிய பிரச்சினையாகாமல் தவிர்க்கலாம்.. மகன்/ மகள் வாழ்வில் வளம் பெருகி ஒளி திகழும். கோபத்தைக் குறைச்சுக்குங்க. அவசர பதில்களையும் வாக்குவாதங்களையும் குறைச்சுக்கிட்டு நிதானமாகவும் மென்மையாகவும் பதில் சொல்லுங்க. மனக்குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டு. திருமண வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீங்க. வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். விருப்ப ஓய்வில் வெளிவரலாமா என்று சிந்திப்பீங்க. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வாயில் தேடி வந்த பிரச்சினை அகலும். கங்கிராட்ஸ்.
ரிஷபம்
உடல் நலத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக்கொள்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. மனசை அமைதியா வைச்சுக்குங்க. ஒன்று மட்டும் நினைவு வெச்சுக்குங்க. உண்மையும் நேர்மையும் உள்ள உங்களை ஒருத்தராலும் எதுவும் செய்ய முடியாதுங்க. தந்தையின் ஆரோக்யம் பயமுறுத்தினாலும் உடனே சரியாகி நிம்மதியளிக்கும். மாணவர்களுக்கு சந்தோஷமும் மன நிம்மதியும் அளிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். மேடையில் ஏறிப் பரிசும், பாராட்டும், கைதட்டலும் பெறுவீங்க. திருமணம் இதோ அதோ என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்ததல்லவா? இப்போ அது வந்தாச்சு வந்தாச்சு. வருமானம் உயர வழி பிறக்கும். வசதிகள் பெருகும். நினைத்த காரியத்தை முடித்து நிம்மதி காண்பீங்க. குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தனவரவு தாராளமாக வந்து சேரும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்க. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சக்ஸஸ்
மிதுனம்
எதிர்பாலின நண்பர்கள் நன்மை செய்வாங்க. சிறிய வகையில் ஆரோக்யம் பாதிக்கப்படும். வெளிநாட்டுப் பயணம் உங்களுக்கோ உங்க மகன்/ மகளுக்கோ கூடிய சீக்கிரத்தில் உண்டு. திடீர் லாபங்களும் தொடர் வருமானமும் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம்/ பதவி உயர்வு/ சம்பள உயர்வு சற்றுத் தடை தாமதங்களுக்குப் பிறகே கைகூடும். சற்றுப்பொறுமையாக இருங்க. சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனமாக இருங்க. குழந்தைகளுக்கு திடீர் நன்மைகள் உண்டு. மம்மிக்க நிதானமான நன்மைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சொத்து விற்பனையால் சொந்தங்களின்பகை அதிகரிக்கலாம். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தி எண்ட்.
கடகம்
எல்லாம் சற்று நிதானமாய்த்தான் நடக்கும். அதனால் என்னங்க. நல்லபடியாவே நடக்கும். மனசைத் திடப்படுத்திக்குங்க. பேச்சில் புத்திசாலித்தனமும் கவரும் தன்மையும் இருக்குமுங்க. அதனால் எல்லோரும் பாராட்டும்படியா பேசுவீங்க.. நடந்துங்ககுவீங்க…. மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பீங்க.. உறவினர் மற்றும் நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்வீங்க. ஆன மொத்தத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. தாயாருக்காக அல்லது தாய் வழி உறவினருக் காக நல்ல வகையில் செலவு செய்து அவரின் நல்லாசியைப்பெறுவீங்க. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வாரம். உற்சாகத்தோடு பணி புரிவீங்க. கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீங்க. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீங்க. யூ வில் டூ இட்.
சிம்மம்
மாணவர்களுக்கு உங்களால் உதவி கிடைக்கும். எனவே அவர்களின் நல்வாழ்த்தும் கிடைக்கும். தயவு செய்து நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நல்லவர் யார், கெட்டவர் யார் என்று ஆராய்ந்து பிறகு நெருங்கிய நட்பு கொள்ளுங்கள். அது வரை சற்றுத் தள்ளியே இருங்கள். மனசுவிட்டுப் பேசுகிறேன் என்று ரகசியங்களைப் பகிர வேண்டாங்க. ஜாக்கிரதை. தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் சட்டென்று வந்தேவிடும். சகோதர சகோதரி களுக்கு நன்மை ஏற்படும். அது அனேகமாக உங்களால் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீங்க. தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். ரிலேடிவ்ஸ் தி கிரேட்.
கன்னி
எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சற்றே கவனமாகக் காலை எடுத்து வையுங்க. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர சகோதரிகளுடன் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் தூங்காமல் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். நல்ல செலவுகள் மற்றும் செலவை மிஞ்சும் வரவு உண்டு. ஆரோக்யத்தை சற்றுப்புறக்கணித்து சாப்பாட்டு விஷயத்தில் ரிஸ்க் எடுக்கிறீர்கள். கவனமாய் இருங்க. தந்தையின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் குடும்பம் சிரமத்திலிருந்து அல்லது ஆபத்திலிருந்து தப்பும். சுபவிரயங்கள் ஏற்படும். சுற்றத்தார்களுக்கு உதவி செய்ய முன்வருவீங்க. திடீர் பயணங்களால் சில நல்ல காரியங்கள் நடைபெறும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீங்க. செல்வாக்கு மேலோங்கும். தனவரவு உண்டு. விருந்து விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரலாம். புகழ் கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நைஸ் ஃப்ரெண்ட்ஸ்.
துலாம்
பரபரவென்று பிசியாக இருப்பீங்க, சரியான தீர்மானங்களை முறையாக எடுப்பீங்க. அதனால் பல வித சிக்கல்களை முன்கூட்டியே ஊகித்து அவற்றிலிருந்து முறையாக மீளுவீங்க. கல்விக்காக நிறையச் செலவுகள் செய்ய வேண்டி வரும். வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதை நிஜமாக்கு வீங்க. சில சிகிச்சைகள் எடுக்க வேண்டி வரலாம். ஆனால் தகுந்த நேரத்தில் தாமதமின்றி ஆரோக்யத்தைப் பாதுகாத்துக்குவீங்க. மம்மிக்க நன்மைகள் அதிகரிக்கும். அவரால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழுவீங்க. சுபச்செலவுகள் ஏற்படலாம். பழைய நண்பர் களின் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீங்க. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வெஹிகிள்ஸ். வாவ்
விருச்சிகம்
குழந்தைங்களை அதிகம் கண்டிக்கிறேன் பேர்வழின்னு டார்ச்சர் பண்ணாதீங்க. சீக்கிரம் அவங்களைப் பற்றிய பிரச்சினை சரியாகப் போகுது. கலைத்துறை யில் உள்ளவங்களுக்கு மெகா ஜாக்பாட் அடிச்ச மாதிரி நன்மைகள் வந்து குவியுங்க. வார மத்தியில் எந்த வம்புக்கும் போகாமல், யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சனம் செய்யாமல் கம்முனு இருங்க. அப்பாவுக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கவனமாய் இருக்கச்சொல்லுங்க. குழந்தைகளுக்கோ, கணவருக்கோ/ மனைவிக்கோ, தந்தைக்கோ இத்தனை காலம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகி நிம்மதி பிறக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. நண்பர்களோடு பகை ஏற்படும். செலவுகளால் மனப்பயம் அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து சேரும். சொல்வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீங்க. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீங்க. யூ வில் கலெக்ட்.
தனுசு
பேச்சைக் குறையுங்கள். வம்பு பேச்சு வேண்டாம். மேலதிகாரிகளைத் தூக்கி எறியும் விதமாகவோ அலட்சியமாகவோ பேச வேண்டாங்க. கணவன் மனைவிக்குள் இப்போது ஏற்படும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் கவனமாக இருங்க. ஏனெனில் அது கிளறாமல் இருந்தால் சிம்பிளாய் முடியப்போகுது. டாடிக்குப் பெரிய அளவில் புகழ் வரப்போகுது. அவர் அவார்ட்/ ரிவார்ட்/ கைதட்டல்/ பரிசு/ பாராட்டு பெறப்போகிறார். எளிய சில சிகிச்சை கள் பெற்று நல்லபடியா ஆவீங்க. வாகனங்கள் ஓட்டும்போது மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் ஓட்டுங்க. வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். நீண்ட நாளைய பாக்கிகள் திடீர்னு வசூலாகலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய வாரம். உறவினர் பகை உருவாகும். குடும்பத்தில் எதிர்பாராத விதத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் உண்டு.ஸ்மால் டிஸ்அப்பாயின்ட்மென்ட்
மகரம்
டாடிக்கு சில சிறு உபாதைகள் வந்து சரியாகிவிடும். சற்று கவனமாகப் பார்த்துக்குங்க. குடும்பத்தில் ஏற்படும் சில்லறைக் குழப்பங்களும் பிரச்சினைகளும் உங்க அமைதியான அணுகுமுறையால் சரியாகிவிடும். நிறையச் செலவுகள் இருந்தாலும் எல்லாமே நல்ல நல்ல செலவுகளாகவும் சுப செலவுகளாகவுமே இருக்கும். உத்யோகத்தில் ஓர் இனிய திருப்பம் உண்டு. அது நீங்க கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தாலும் ஆச்சர்யமில்லைங்க. மாணவர்கள் மேடை ஏறிப்பரிசு வாங்குவீங்க. சான்றோர்களின் ஆலோசனைக்குத் தகுந்த பலன் கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனமாற்றம் பற்றி சிந்திப்பீங்க. புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீங்க.. இடம் வாங்குவதில், விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் மாறும். அரசியல் வாதிகளால் நன்மை உண்டு. வருமானம் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கலாம் எனிமிஸ் –வார ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் –பீ கேர்ஃபுல்.
சந்திராஷ்டமம்: மார்ச் 25 முதல் மார்ச் 27 வரை
கும்பம்
நண்பர்கள் பெரிய அளவில் உதவி செய்வாங்க. குறிப்பா வெளிநாட்டில் உள்ளவங்களால நன்மை ஏற்படப்போகுது. மகன்/ மகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டாகும். உதவித்தொகை போன்றவை கிடைக்கும். அவங்களுக்கு அரசாங்க மற்றும் வங்கி வேலைகள் கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர் என்றால் கணவன் மனைவிக்குள் இனிய ஒற்றுமை நிலவும். அதிருஷ்ட தேவதை உங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைப்பாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். நாள்பட்ட கடன்கள் வசூலாகும். உடன் பிறப்புகள் உறுதுணை புரிவர். நிதி நிலை உயரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீங்க. பயணத்தால் பலன் உண்டு. வார மத்தியில் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. பீ வெரி கேர்ஃபுல்
சந்திராஷ்டமம்: மார்ச் 27 முதல் மார்ச் 30 வரை
மீனம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடிவரும். ஆசிரியர்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. அரசாங்க உத்யோகம் மற்றும் வங்கி வேலைக்காகக் காத்திருந்தவர் களுக்கு ஆஃபர் லெட்டர் வந்தாச்சு. நகைங்களுக்காகவும் ஆடை ஆபரணங்களுக்காகவும் கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்யறீங்க. கொஞ்சம் பார்த்துக்குங்கப்பா. சீக்கிரத்தில் வீட்டில் ஒரு சுப செலவு இருக்கு. அதுக்குப் பணம் மிச்சம் வெச்சுக்குங்கப்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்டை வராம பார்த்துக்குங்க. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். கூடிய சீக்கிரம் நீங்க அவங்ககிட்ட சரண்டர் ஆகவேண்டியிருக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீங்க. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வீண் பழிகள் அகலும். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத்தகவல் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்க. உத்தியோக முயற்சி கைகூடும். உடல் நலம் சீராகும். வாரக் கடைசியில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்க. ப்ளீஸ்
சந்திராஷ்டமம்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை