மேஷம்

எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் அதை தனது சொந்த வேலையாக கருதி உரிமையுடன் செயல்பட்டு அதிகாரிங்களோட நட்பைப் பெறுவீங்க. இதனால் வராமல் கிடந்த கடன் தொகைகள், ஊதிய நிலுவைகள், கேட்ட இடமாறுதல் எல்லாம் கிடைக்க வாய்ப்பு வரப்போகுது. இதனால் உற்சாகமாக பணியாற்றி நிலுவை பணிகளை உடனடியாக ஒரே மூச்சில் முடித்துக் காட்டி பாராட்டு பெறுவீங்க. உழைப்பால் உயர்வு நிச்சயம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ஏற்கனவே  முயற்சித்தவைகளை முடித்துக் காட்டும் வாரம் இது.  பணியாளர்கள், தங்களது திறமைக்கு ஏற்ற வருமானம் வரலையேன்னு புலம்பலாம். இருப்பினும் உங்களை மறைமுகமா வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. உங்க நீதியும், நேர்மையும் நேரம் வரும் போது ஒர்க் அவுட் ஆகும். கூட இருக்கறவங்க போட்டுக் கொடுத்து இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவாங்க. தட்ஸ் ஆல்ரைட். உங்களுக்கு பாதிப்பு ஏதும் வராது. டோன்ட் ஒர்ரி. இந்த வாரம் நீங்க எடுக்கும் முயற்சிகள் பிற்காலத்தில் உங்களோட உயர்வுக்குக் காரணமாக அமையுங்க. யூ கேன் பி ஹாப்பி.

ரிஷபம்

தாயார் வழி சொத்துக்கள் வந்து மகிழ்ச்சி தரும், உடன்பிறந்த பெண்களுக்கு நல் வழிகாட்டப்படும். திருமணம், வேலை வாய்ப்பின் மூலம் ஹாப்பியாவீங்க. கோயில், யோகா, நடைப் பயிற்சிகள் மூலம் உங்க நல்ல மனசைக மேலும் தூய்மைப்படுத்திக்குவீங்க. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பிருக்கறதால அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போங்க. ப்ளீஸ். பேசும்போது பொறுமை அவசியம். மம்மி  வழி உறவினர்களால ஆதாயம் கெடைக்க வாய்ப்பு உண்டுங்க. பிள்ளைங்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கணுங்க. மம்மி வழி உறவுகளால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். பிரிஞ்சிருந்த குடும்பங்கள் சேரும். டாடியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்க புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீங்க. யார்கிட்டயும் எதையும் நல்லா நிதானமாக வார்த்தைகளை அளந்து பேச வேண்டிய நேரம், கேர்ஃபுல்லாமட்டும் இருந்துக்குங்க. போதும். தட் இஸ் இனஃப்.

சந்திராஷ்டமம்: பிப்வரி 25 முதல் பிப்வரி 27 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

பதவிகளைப் பிடித்து பண பலனை பெற சரியான நேரம் இது. ‘ஆன்’லைன் தேர்வாளர்கள் எக்காரணம் கொண்டும் மாற்று வழிகளை தேர்வு செய்ய வேண்டாம். அதிகாரிகளிடம் ரொம்பவும் கேர்ஃபுல்லா நடந்துக்கிட்டீங்கன்னா நற்பெயர் பெறுவீங்க.  விருப்பம் போல் அதிகமான வருவாய்க்கு வழி காண நிறைய ஹார்ட் ஒர்க் செய்வீங்க. பல்வேறு துறைகளில் வருமானம் வந்து மகிழ்வூட்டும்.  நீண்ட நாள் கை பிடிக்க கனவுக்கண்ட காதலர்களுக்கு தங்கள் எண்ணங்கள் ஈடேறும் காலம் வந்து விட்டது எனலாம். தாய்வழி உறவுகள் மிகவும் அன்யோன்யமாக வந்து நட்பு காட்டுவர், புதிய வாகனம், ஜவுளி, நகை போன்றவைகளை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நீங்க லாபமோ வருமானமோ எதிர்பார்க்காமல் சும்மாவானும் செய்த செயல் ஒன்று லாபகரமாக வருமானம் கொடுத்துச் சந்தோஷத் திணறல் வழங்கும்.  யெஸ். யூ வில் பி வெரி ஹாப்பி.

சந்திராஷ்டமம்: பிப்வரி 27 முதல் மார்ச் 1 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

 கடகம்

உங்களோட முயற்சிகள் எல்லாம் சாதகமா முடியுமுங்க. ஆனாலும் தடைகள் தாமதங்களைத் தவிர்க்க முடியாதுதான். டாடிகிட்டேயிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமை முக்கியம்னு நினைவில் வெச்சுக்குங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்தான். ஆனாலும். வீண் செலவுகளும் ஏற்படும்னு நினைவில்  வெச்சுக்குங்கப்பா. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகன் / மகள் முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். ஆனால் எதுவும் ஒரு இழுபறியாவே இருக்கும் என்பதைத் தவிர்க்க முடியாதுங்க. சாரி.. ஆனால் விரைவில் லேசாகவேனும் நிம்மதி தரும் செய்தி கிடைக்குமுங்க . வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சாப்பாட்டு விஷயத்துல மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துட்டிங்கன்னா போதும். ஹெல்த் பிரச்னை எதுவும் வராது. யூ நீட் நாட் ஒர்ரி.

சந்திராஷ்டமம்: மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

அற்புதமான மனநிலை, மகிழ்வான உடல் நிலை, பெரியோர்களின் வாழ்த்துக்கள் எல்லாம் கெடைச்சு நல்லபடியா இருப்பீங்க.  நல்ல வாய்ப்புகள் வரிசையாக வந்து வாசல் கதவை தட்டும் நேரம். தெரிவு செய்வதில் தட்டு, தடுமாறிப் போகலாம் கவனமாயிருந்துக்குங்கப்பா. குதூகலத்திற்கு குழந்தைகள் பெரிதும் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தில்டி யாரேனும் அப்பிடி, இப்புடி இணக்க குறைவு இருந்தாலும் அதையும், சமாளிச்சு சகஜ நிலைக்கு கொண்டு வந்து காட்டுவீங்க. நீங்க ஸ்டூடன்ட்டா? ஆசிரியர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள், அரசாங்க பதவிகள் தானாக வந்து சேரலாம். உங்களை தங்களை மதிக்காதவங்களைத் தவறுதலா நினைக்கறதை நிறுத்திக்குங்க. பெரிவங்க ஆசீர்வாதம் நிறையும். கல்யாணம் நிச்சயமாகும். கணவருக்கு/ மனைவிக்கு ஹாப்பி நியூஸ் உண்டுங்க. மனசில் புதுசா ஒரு புத்துணர்ச்சி தோன்றி சந்தோஷப்படுத்தும். யெஸ். யூ வில் பி வெரி ஹாப்பி.

கன்னி

எல்லார் கிட்டேயும் கனிவோட நடந்துக்குங்க. பெரியவங்க கிட்ட ரொம்பவும் எச்சரிக்கையோட நடந்துக்கிட்டு நல்ல பெயர் வாங்க முயற்சி செய்ங்க. ஏற்கனவே துவங்கிய பணிகள் மூலம் வர வேண்டிய வருமானம் வந்தாலும் செலவுகளும் அதனை தொடர்ந்து துரத்துவதால் கைக்கு வந்து கரைந்து போகலாம். புதிய முயற்சிகள் தொடரட்டும். தவிரவும் பலன்களை எதிர்பாராமல் உழைக்க வேண்டியும் வரலாம். எதிர்பாராத வெளியூர் பயணங்களால் பணத் தட்டுப்பாடு வரலாம். இருப்புகளைக் கொண்டு திருப்தி அடைஞ்சு இன்முகம் காட்டுங்க. குழந்தைங்களோட கல்வி செலவுகளும் கூடுதலாக வந்து சேரலாம். எப்படியானாலும் ‘‘பிரஸ்டீஜ்’ மன்னர்களாயிடுவீங்க. எதையும் சமாளிச்சு ஜெயிச்சுப் புன்னகைப்பீங்கப்பா.  ஆசிரியர்கள் உங்களின் குழந்தைகளைப் புகழ் பெற வைப்பாங்க. குறிப்பாகக் கற்பனை சார்ந்த  துறைகளான நடனம் நாட்டியம் ஓவியம் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் மிகச் சிறந்து விளங்குவார். யெஸ். அஃப்கோர்ஸ்.

துலாம்

சொந்த பந்தங்களுக்குள் நல்ல நட்புறவு பெருகும். இதனால் குழந்தைங்களுக்கு வரன் தேடும் வேலை எளிதாகலாம். உங்க சொந்தத்திற்குள் வரன் பார்த்து வாழ்க்கை பாதை அமைத்துக் கொள்ள சான்ஸ் இருக்குங்க. பொதுவாக வெளியிடங்களில் பொறுமையுடன் செயல்படுவதே சிறப்பாக அமைந்திடும். எந்த ஒரு போட்டிகளையும் எளிதில் எதிர் கொண்டு சாதனை படைக்கும் மன திடமும் செயல்களில் உறுதியும் வந்துவிடும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு சாதகமான நிலையை நிச்சயம் பெறலாம். அயல்தேச ஒப்பந்தங்களும், உள்நாட்டில் உயரிய அந்தஸ்து உள்ள நிறுவனங்களும் தங்களின் உயர்விற்கு உறுதுணையாக நிற்கும். மம்மி டாடிக்கு திடீர் சந்தோஷத்தை சர்ப்பிரைஸாக் குடுத்து அசத்தினால் என்னன்னு ஒரு எண்ணம் தோன்றும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் ஒன்றும் வரவில்லையேன்னு ஏங்கிக்கிட்டிருந்தவங்களுக்கு நல்ல முன்னேற்றம் வரும். பிராமிஸ் செய்தால் அதை நிறைவேற்றணும்னு நினைவு வெச்சுக்குங்கப்பா. ப்ளீஸ் ரிமெம்பர்.  

 விருச்சிகம்

முன்பெல்லாம் ஆரோக்யமும் எதிரிகள் பயமும் உங்களை வாட்டி வதைச்சுக்கிட்டிருந்தது. அது இரண்டுக்கும் இந்த வாரம் நோ என்ட்ரி.  வேலைகளில் வெகு மும்முரம் காட்டுவீங்க. மேலதிகாரிகளும் மிகவும் இணக்கமாக நடந்து கொள்வர். கேட்ட இடமாறுதல், பதவி உயர்வு, எதிர்பார்த்த வீட்டு கடன், வாகன கடன்கள் யதார்த்தமாக, உடனடியாக வழங்கப்படலாம். பணியின் நிமித்தம் பல இடங்களுக்கு போக்கு வரத்திலேயே இருப்பீங்க. அது நேரம் உணவுகளால் உபாதைக்கு உட்பட்டு வயிறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் வாய்க்கட்டு, உடற்கட்டை உறுதியாக்க ஹெல்ப் செய்யும்னு ஞாபகத்துல  வெச்சுக்குங்க. இத்தனை காலம் தொடர்ந்து இருந்து வந்த அலுவலக ரொட்டீன் மாறுபட்டு வேறு வகையான பாதையில் பயணிக்கும். இதுவும் நல்லாத்தான் இருக்கும். டென்ஷன் ஆவாதீங்க. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கட்டாயமாய்க் கடைப்பிடிக்கணுங்க. டோன்ட் ஃபர்கெட்.

தனுசு

திஸ் வீக்.. யாரும் கேட்காமலே பலருக்கும் நல்லது செய்ய நினைப்பீங்க. நல்ல தேக ஆரோக்கியம், அற்புதமான மனநிலை, தாய், தந்தையார் நலனும் நன்றாகவே உள்ளது. கணவருக்கு/ மனைவிக்கு கண் பிரச்னைகள் வரலாம். மற்றபடி எல்லாம் சூப்பரா இருக்குங்க. யோகா, பிராணாயாமம் செய்வீங்க. எதிர்பார்த்த பெரிய அளவிலான தொகைகள் கெடைச்சு நினைச்ச விஷயத்தை நல்லபடியா முடிப்பீங்க. நெருக்கடிகளை அவ்வப்போது கொடுத்துக்கிட்டிருந்த உறவுக்காரங்க எல்லாம் நெருங்கி வரும் நேரம் இது. அடுத்த வீட்டுக்காரங்களும், பாச மழையைப் பொழிவாங்க. ஜஸ்ட் பிகாஸ் உங்க தயவு உடனடியாக அவங்களுக்குத் தேவைப்படும். வேறென்ன? அது பாட்டுக்கு அது.. பட்.. தேவைப்படும் முக்கிய இடங்கள்ல ஒங்க திறமை நிச்சயம் போற்றப்படும்.  நீங்க ஸ்டூடன்ட்டா? எனில் . ஆசிரியர்களிடம் மிக்க மரியாதைகளுடன் நடந்து அவர்களின் ஆசீர்வாதம் பெறுவீங்க. இதனால் மனநிலையில் பெருமகிழ்வு ஏற்படும். யெஸ். எ கிரேட் ஹாப்பினஸ்.

மகரம்

நல்ல முயற்சி அதற்கேற்ற (பண) பலன் என்பது மட்டும் ஷ்யூரா நடக்கும். விருப்பம் போல் வெகுவான முறையில் படாடோபமாக செலவுகள் செய்வதற்கு இந்த வாரம் சான்ஸ் இல்லைங்க. எப்பொழுதுமே கரைந்தாலும், குறைந்தாலும், நிறைந்தது போல வெளியில் காட்டிக் கொள்ளும் பக்குவம் என்பது உங்களுக்கு மட்டுமே உரித்தானது! குழந்தைங்களோட கல்வி செலவுகளுக்காக லேசாத் திண்டாடினாலும் அப்பறம் தைரியமாயிடுவீங்க. சமாளிச்சுடுவீங்க. நேரத்தில் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற ஃபார்முலாவை மட்டும் நல்லா ஞாபகத்துல வெச்சுக்குங்க. அப்பா வழி உறவுகள் தங்கள் தரத்தை பதம் பார்த்தாலும், அம்மா வழி உறவுகளால் நீங்க எதிர்பார்த்ததை மகிழ்வான நிலையை எட்டிடுவீங்க. பட்.. ஒன் திங்.. நல்லா நினைவு வெச்சுக்குங்க. சோர்ந்து மட்டும் போயிடாதீங்க. தைரியமும் தன்னம்பிக்கையும்தான் இந்த வாரம் மோஸ்ட் நீடட்.

கும்பம்

நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற மன நிலையில் சற்று ‘ரெகுலேட்டர்’வைச்சு மெதுவாக செயல்படுவீங்க. எதையும் நல்லா யோசிச்சுச் செய்தால் பிரச்னை வராது என்பது புரிவதால் மனசில் அமைதியும் நிம்மதியும் பக்குவமும் கூடும். பணிபுரியும் இடத்துல பக்குவமாக சக ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் நடப்பது நல்லதுங்க. வாய்ப்பேச்சில் வம்புகள் இலவசமாக வந்து வறுத்தெடுக்கும். அதனால் ரொம்ப ஜாக்கிரதையாப் பேசுங்களேன். புதிதாக நகை வாங்குவீங்க. திருமண வயதில் உள்ள குழந்தைங்களுக்கு  நல்ல வரன் தேடிக்குடுத்து நிம்மதியடைவீங்க. குழந்தைப் பேறு இல்லாத சிலருக்கு மழலைகள் உருவாக நெறைய சான்ஸ் இருக்கு அல்லது குழந்தைங்க உங்க மனசைப்புரிஞ்சு நடந்துக்குவாங்க. லேடீஸ்கிட்ட மதிப்பும், மரியாதைகளுடன் நடந்து நல்ல பெயரை வாங்க வேண்டியது ரொம்பவும் அவசியம்னு நினைவில் வெச்சுக்குங்க.  ப்ளீஸ் ரிமெம்பர் தட்.

மீனம்

மறதியால் குழப்பமடைவீங்க எனவே எதையும் முறையாக பயிற்சி எடுத்து மனதில் வைச்சுக்கிட்டீங்கன்னா வெற்றி உறுதியாகும்னு ஞாபகத்துல வெச்சுக்குங்க. எப்படி வந்தது என்று அறியும் முன்பே அடுத்தது வந்து மகிழ்வூட்டும் வகையில் பொருளாதார நிலை இருக்கும், புதுமையான வழிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பட் அதொண்ணும் சும்மா வந்துடாது. நிறைய உழைப்பீங்க. சிரமப்பட்டுத்தான் கெடைக்கும். பட்.. கிடைக்கும். பர்சனல் விஷயங்களில் கனவுகள் நனவாகும் வாரம். அன்புடன் அனைவரிடமும் நடந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று ஹாப்பியா ஆயிடுவீங்க. பல வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு பார்த்து முடித்துக் காட்டுவதால் சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் இன்கிரீஸ் ஆகும். அது மட்டும் இல்லைங்க…  தலைமையிடத்திற்கு உங்க கிட்ட தனி பிரியமும் ஏற்படும். யூ கேன் பி ஹாப்பி அண்ட் பிரவுட்.