மேஷம்
இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. நீங்க இளைஞர் என்றால் உங்களுக்கும்.. பெற்றோர்னா உங்க குழந்தைங்களுக்கும் திருமண வாய்ப்பு உறுதியாகும். இளைஞர்கள் மனசுக்கு நெருக்கமானவங்க கூடப் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் அதிகம் உள்ளவர் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துகொள்வீங்க. பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. பிலீவ் மீ. பழைய பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். சிநேகிதம் என்று ஏமாந்து கையைச் சுட்டுக்கிட்டீங்க. இட்ஸ் ஓகே. சேதாரம் இல்லாம பாடம் கத்துக்கிட்டீங்களே.. அதுக்கு தாங்க் காட். புதிய வீடு பொலிவுடன் ரெடியாகும். குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க.
ரிஷபம்
தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் உங்க படிப்பு/ பிசினஸ்/ வேலை உண்டு நீங்க உண்டுன்னு போறது நல்லதுங்க. யார் கண்டது பிரைஸ் ஏதாச்சும் வாங்கி.. கைதட்டல் வாங்கக்கூட வாய்ப்பு இருக்குங்க. ஆனால்.. உங்க பேச்சிலும் நடத்தையிலும் ரொம்பவே கவனமாய் இருக்கணும். தட்ஸ் ஆல். பாக்கெட் காலியாகும் காலம் இது. அதுக்கெல்லாம் அசராதீங்க. இதோ நிரம்பிடும். விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் தொடரும். இதுவரை தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்த்தீங்க. அதனால் உழைப்புகேற்ற பலன் இல்லாமல் இருந்தது. இனிமேல் நல்லபடியா உழைப்பை அதிகரிப்பீங்க. மனசுல நிம்மதி நிறையும். ரொம்ப நாளாச்சில்ல?
மிதுனம்
ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள்ல இன்கம் வரும். எனவே செலவு பத்தின பயம் எதுவும் அறவே இருக்காது கணவன் மனைவிக்கிடைல விட்டுக் குடுத்துப் போங்க. அதனால உங்களுக்கு எந்தக் குறையும் வந்துடாது. நல்லதுதாங்க நடக்கும். ஷ்யூர்லி. மகன் அல்லது மகள் திடீர்னு ஒரு சின்ன சாதனை செய்து உங்க பெயரை நிலைநாட்டிடுவாங்க. மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அரசியலில் உள்ளோர் மக்களுடன் கலந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். குடும்பத்தில் வர வேண்டிய தொகை காரணமாக ஒருவருக்கொருவர் மனத்தாபம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நினைத்தது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறி இப்போதுதான் நிலைமை சீராக ஆரம்பிக்கும். கடந்த சில வாரங்களா எதை எடுத்தாலும் அதுல தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்துக்கிட்டிருந்ததுதானே? அதெல்லாம் இனி மாறியாச்சுங்க.
கடகம்
எப்பவும், எதுக்காவும் புலம்பாதீங்க. உங்க பக்கம் நியாயம் இருக்கும் என்றால் நீங்க எதுக்கும்.. யாருக்கும் பயப்படாதீங்க. ஆசிரியர் தொழில்ல உள்ளவங்க தவிர மற்றவங்க உங்க பேச்சில கவனமாக இருக்கணும். எதிர்பாலினத்தவர் விஷயத்தில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கப்பா. ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்துடுங்க. பயணங்களால வெற்றியும் நன்மையும் ஹாப்பினஸ்ஸும் கெடைக்கும்- எஸ்பெஷலி ஆபீஸ் சம்பந்தமான டூர்களில். மேரேஜ் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைங்க ஆரம்பிச்சிருக்குமே. உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்து சரியாயிடும்.
சிம்மம்
100 பர்சன்ட் லாபம் .. நன்மை.. வருமானம் வரணும்னு நினைச்சீங்கன்னா.. 150 பர்சன்ட் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு அஞ்சுபவர் இல்லை நீங்க. எனவே ஜமாயுங்க. என்ஜாய். உங்களோட உன்னத உயரம் குறையாமல் கௌரவத்தைக் காப்பாத்திக்குவீங்க. புகழ் அதிகரிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். . காதல் விஷயங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் வாங்கும் செலவு வரும். கணவருக்கு.. மனைவிக்கு சின்ன டென்ஷன்ஸ் ஏற்பட்டுச் சரியாகும். தாங்க் காட். வெளி ஆளுங்களை உங்க விவகாரத்துல தலையிட விடாம அழகா சமாளிச்சீங்களே. அருமை. . நண்பர்கள் யாரு.. பகைவர்கள் யாருன்னு இனம் கண்டுகொள்ளும் திறன் வரும். தந்தைக்கு நன்மை ஏற்படும். ஹாப்பி?
கன்னி
இவ்ளோ காலமாய்க் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்று வரும்பொழுது ஸ்லைட்டா போராட்டம் இருக்கும். பொறுமை. பொறுமை. அது மட்டும்தான் இப்போதைக்குத் தேவைங்க. குடும்பத்துல தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். எதிர் பாலினத்தினரிடம் பழகும்போது கொஞ்சம் கவனமாய் இருங்க. ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. அரசுத் தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பெற்றுத் தருவார். இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் அதிகமாகும். உறவினர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் முயற்சி செய்யறீங்களா? நல்லபடியாக்கிடைக்கும். ஆனால் எல்லாமும் கொஞ்சம் தடை தாமதத்துக்குப் பிறகுதான் நடக்குங்க. உங்க அவசரப்போக்கை இப்போதைக்கு மூட்டை கட்டி வையுங்க. ப்ளீஸ்.
சந்திராஷ்டமம்: செப்டம்பம் 20 முதல் செப்டம்பர் 22 வரை
சந்திராஷ்டம நாட்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமா இருங்க.
துலாம்
கடந்த வாரங்களைவிடவும் இந்த வீக் சுறுசுறுப்பும் வேகமும் உங்க உடம்புக்குள்ள புகுந்துக்கும். உங்களுக்கு உள்ளுக்குள்ள சின்ன பயம் இருந்தாலும் வெளிப்பார்வைக்குத் தெரியாதபடிக்கு தைரியத்தோட எதையும் செய்து முடிப்பீங்க. வண்டி வாகனத்தில் போகும் போது கேர்ஃபுல்லாப் போகணும். போவீங்க. ப்ளீஸ் நல்லதே நடக்கும். டவுட் வேணாம். லோன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் கொஞ்சம் டிலே ஆகக்கூடும். பிளான் செய்த எதையுமே எடுத்தோமா முடிச்சோமான்னு கடகடன்னு செய்ய இயலாம கொஞ்சமே கொஞ்சம் தடை தாமதம்ஸ் ஏற்படும். இதனால ஸ்லைட்டாக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனாலும் கடைசில ஒரு வழியா சக்ஸஸ்தான். மாணவர்களுக்கு சூப்பர் வாரம் இது. நல்லாப் படிச்சு எக்ஸாம்லாம் அருமையா எழுதுவீங்க. கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு வந்து.. நல்ல வேளையாய் வெள்ளைக் கொடி பறக்க விட்டு சமாதானம் ஆயிடுவீங்க.
சந்திராஷ்டமம்: செப்டம்பம் 22 முதல் செப்டம்பர் 24 வரை
சந்திராஷ்டம நாட்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமா இருங்க.
விருச்சிகம்
தேவையேயில்லாத விஷயங்களைப் பத்திப் பேசி உங்க பார்ட்னரையோ அல்லது வீட்ல உள்ள மத்தவங்களையோ ஹர்ட் செய்யாதீங்க. ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. அநாவசியமா மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்கவே செய்யாதீங்க. முன் எப்போதோ கொடுத்து மறந்தே போயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும். வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்கள் செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு நன்மை ஏற்படும். உங்க தொழிலில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வரலாம் கவனமாக இருங்க. அது போதும். இந்தப் பிரச்சினை பர்மனென்ட் இல்லைன்னும் புரியும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. இந்த ராசிக்காரங்க எல்லாருமே சற்றே முயற்சி எடுத்தால் போதும். எந்த விஷயத்துலயும் நல்ல வெற்றி கெடைக்கும் எழுதுவீங்க.
சந்திராஷ்டமம்: செப்டம்பம் 24 முதல் செப்டம்பர் 26 வரை
சந்திராஷ்டம நாட்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமா இருங்க.
தனுசு
ஷேர் மார்க்கெட்ல ஈடுபட்டீங்கன்னா ஓரளவு சாதகமான பலன் தரும். அதுல ஓரளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய இது உகந்த நேரம். நல்ல லாபம் வரும். ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எதையும் செய்துடாதீங்க. மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக் கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க நிறைய முயற்சி எடுக்கணுங்க. மன அமைதிக்காக வெளியூர் போக நினைச்சீங்க. அது தடைப்படக்கூடும். வீட்டுக்குள்ள நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும். உங்களுக்கு எந்த வயசானாலும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். ஆபீஸ்ல சம்பள உயர்வு இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம். எனினும் கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும்.
மகரம்
கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதற்கான வருமானம் சிறிது காலத்துக்குப் பிறகே கிடைக்கும். எப்டியோ… உற்சாகம் குறையாது. நெவர். எது பற்றியும் அடிக்கடி சற்று அதிகமா முயற்சிகள் செய்ய வேண்டி வரும். நல்ல வேளையாய் அதில் டயர்ட் ஆக மாட்டீங்க. இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டிய நேரம் இது. வம்புகளில் மாட்டிக்காம இருந்துடுங்க. போதும். பி கேர்ஃபுல்பா. நண்பர்/ சிநேகிதி ஒருவருடன்… அல்லது காதலன்/ காதலியுடன் ஏற்பட்டிருந்த சண்டை ஒன்று அசட்டுச் சிரிப்புடன் சரியாகி இப்போத ஜாலியாப் பேச ஆரம்பிப்பீங்க. மிஸ்டேக் உங்க பேர்லதானே? நீங்கதானே வம்பு செய்து சண்டை போட்டீங்க. எனில் நீங்கதான் காலில் விழுந்து ஸாரி சொல்லணும். சொல்லுங்க. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ரொம்ப நாளாத் தேடிக்கிட்டிருந்த பொருள் ஒண்ணு கிடைச்சு ரொம்ப ஹாப்பியாவீங்க.
கும்பம்
இப்போ உழைக்கற உழைப்புக்குச் சில காலம் கழிச்சு அருமையான வருமானம் வரும். மேலிடத்தில் உங்களைப் பத்தின நல்ல அபிப்ராயம் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஸோ கொஞ்சம் பொறுமையோட இருங்க. மனசு தளராம உங்க கடமைங்களை செய்துக்கிட்டே போங்க. ஆபீஸ்ல உன்னிப்பா வேலை செய்து தவறு வராம பார்த்துக்குங்க. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தன்னிச்சையாய்க் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நிச்சயமாக அதிகம் முயற்சி எடுத்து சிரமப்படுவீங்க. மது, போதை பழக்கத்திற்கு அடிமையாயிட வேணாம். ஒங்க ராசியைப் பொருத்த வரைக்கும் மனசு வைச்சா மலையையும் நகர்த்தற மனோதிடம் கொண்டவங்க நீங்க. உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. ப்ளீஸ் டோன்ட்.
மீனம்
புதுசா பிசினஸி ஆரம்பிக்கற ஐடியாவைக் கொஞ்சம் தள்ளிப்போடலாமே? ஒரு வேளைப் புது முயற்சி எதையேனும் மேற்கொண்டுதான் ஆகணும்னு நிலைமை ஏற்பட்டடா அந்த விஷயத்தில் நல்ல அனுபவம் உள்ள நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு எதையும் டிஸைட் செய்யறது பெட்டர் . அப்பிடி செய்தால் ஷ்யூரா பிரச்சினைங்கள்லல போய் மாட்டிக்க மாட்டீங்க. நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க கொஞ்சம் பொறுமை தேவை. வீட்டில் உள்ள சூழ்நிலை உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். உங்களுக்கோ அல்லது உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கோ திருமண முயற்சிகள் கை கூடி வரும். ஆல் த பெஸ்ட். ரொம்ப நாளாத் தள்ளிப்போட்டுக்கிட்டிருந்த விஷயங்களை டக் டக்குன்னு முடிப்பீங்க. அட இது இவ்ளோ சிம்ப்பிளா.. தெரிஞ்சிருந்தா அப்பவே முடிச்சிருப்பேனேன்னு மனசுக்குள் ஆச்சர்யமும் ஏற்படும். வெளியூர்/ வெளிநாட்ல உள்ள நெருங்கின குடும்பத்தினரைச் சந்திக்க சந்தோஷமாய்ப் விமானப் பயணம் செய்து சந்திச்சு மகிழ்வீங்க. குட் லக்.