மேஷம்

இந்த வாரம் மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டுச் சென்ற ஃப்ரெண்டு ஒருத்தரு மீண்டும் வந்து சேர்ந்துக்குவாரு. அதனால் ஹாப்பி ஆயிடுவீங்க. வீண் மனக்கவலையெல்லாம் இருந்த எடம் தெரியாம ஓடிடுங்க. எதிர்பாராத செலவு வந்தாலும் அது சந்தோஷம் குடுக்கும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில் பிஸினஸ்தொடர்பான விஷயங்கள்ல ஏற்பட்ட திடீர் தடை டாட்டா சொல்லிட்டு ஓடிரும். எல்லாச் செயல்களையும் திட்டமிட்டு செய்வீங்க. ஸோ.. சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவீங்க. டோன்ட் ஒர்ரி.  ஃபேமிலில நடைபெறும் சில விஷயங்கள் ஒங்க கோபத்தைத் தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

ரிலேடிவ்ஸ்கூட ஒங்களுக்கு இருந்த பழைய பகைகள் மாறும். திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீங்க. கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறைந்து வெற்றிகள் இன்கிரீஸ் ஆகும். ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். குறையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கறது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீகச் சொத்துகள் மூலம் வரும் இன்கம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில் பிஸினஸ்மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய கஸ்டமர்ஸ் கிட்ட நிதானமாப் பேசி பிஸினஸ் செய்வது நல்லது. போட்டிகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கறது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம்

வீண் ஆர்க்யூமென்ட்ஸைத் தவிர்க்கறது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் பெறும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனசுல பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீங்க. கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. ஸ்டூடன்ஸ்க்கு உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த ஹெல்ப்ஸ்லாம் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசிச்சு செய்வது நல்லது.

கடகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பிரமோஷன் கெடைக்கும்.  ஃபேமிலில கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் பிஸினஸ் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிராப்ளம்ஸ் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கெனவே பிஸினஸ்தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை தெரிஞ்சுக்கிட்டு குறைஞ்ச இன்வெஸ்ட்மென்ட் செய்து லாபம் ஈட்டுவீங்க. தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

சிம்மம்

இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மன திருப்தியுடன் செய்வீங்க. புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்து இன்கிரீஸ் ஆகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பிராஃபிட் கூடும். பழைய பாக்கிங்க வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீங்க. பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிங்க சொல்றதைக் கேட்டு தடுமாற்றம் வந்தாலும் வெற்றி பெற்ற பிறகு ரீஸன் புரிஞ்சு ஆச்சர்யப் பட்டு விழியை விரிப்பீங்க. உங்களோட சீக்ரட்ஸ் யார் மூலம் கசி[யதுன்னு அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். பிசினஸ் செய்யறவங்களுக்குக் கஸ்டமர்ஸ் விரும்பி வருவாங்க. நீண்ட காலமாக வேலையில்லாம இருப்பவர்களுக்கு வேலை கெடைக்கும். ஒய்ஃபோட/ ஹஸ்பெண்டோட ஏற்படும்  கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கப்பாருங்க. வீட்ல உள்ளவங்களால சந்தோஷம் உருவாகும்.

கன்னி

ஆபீஸ் சம்பந்தப்பட் தீர்மானங்களை நிதானமா யோசிச்சு செய்வது நல்லது.  ஃபேமிலில உள்ளளவங்க கூடவீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீங்க. கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  படிப்பில் கவனம் செலுத்துவீங்க. மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான ஹெல்ப்ஸ்லாம் கிடைக்கும். ஒங்க மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தண்ணீர்ப் பழங்கள், பூக்கள், இரத்தின வகைகள் மற்றும் பல வடிவமைப்புக்கள் கொண்ட பொருட்கள் ஆகியவற்றின் பிஸினஸ் லாபம் தரும்.

துலாம்

இந்த வாரம் வாக்கு வன்மையால் பெனிபிட் மற்றும் பிராஃபிட் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். அனைத்தையும் சமாளிக்கும் திறன் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் அதிக இன்வெஸ்ட்மென்ட் செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  ஃபேமிலில கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொள்வர்.

விருச்சிகம்

பிள்ளைங்களால திடீர் செலவு உண்டாகலாம். குடும்பத் தலைவிங்களா உள்ள பெண்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மனத் தடுமாற்றம் நீங்கி ஹப்பாடான்னு நிம்மதி வருங்க. ஸ்டூடன்ஸ்க்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துடுங்க. இந்த வாரம் மத்தவங்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீங்க. முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. பணவரத்து அதிகரிக்கும். மனசுல புதுதெம்பும் உற்சாகமும் தோணும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தொழில், பிஸினஸ்தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த ஹெல்ப்ஸ்லாம் வந்து சேரும்.

தனுசு

பொருளாதாரம் ஹாப்பியா, திருப்தியா இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.  ஃபேமிலில திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின்போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. கலைத்துறையினருக்கு மனசுல புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். ஸ்டூடன்ஸ்க்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீங்க. உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கியமான முடிவுகளை எடுப்பாங்க.

மகரம்

பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் கூட இருந்துக்கிட்டிருந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவங்க எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவாங்க. மேரேஜ் அல்லது குட்டிப்பாப்பா பொறக்கறது தள்ளிப் போனவங்களுக்கு கூடி வரும். மனைவி வழி ரிலேடிவ்ஸ் மத்தில இருந்த சலசலப்புகள் காணாப் போயிடுங்க. புதிய பதவி, பொறுப்புகள் தேடிக்கிட்டு வரும். தாமதமாகிக்கிட்டிருந்த கவர்ன்மென்ட் விஷயங்fள்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். புதிதாக வாகனம் வாங்குவீங்க. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களோட நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த விஷயங்களைத் தொடங்குவீங்க. வங்கிக் கடன் ஹெல்ப் கிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும்.

கும்பம்

மனோபலம் கூடும். தன்னிச்சையா, தைரியமா டெஸிஷன்ஸ் எடுக்கத் தொடங்குவீங்க. வீடு மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய பிரதர் வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீங்க. மனசுல இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த குழப்பங்கள் நீங்கி இனித் தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு அல்லது மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன், கூடாப் பழக்கங்களிலிருந்து விடுபடுவீங்க. மனசு நிம்மதியாகும். உங்க ஆபீஸ்ல உள்ள மேலதிகாரிங்க ஒங்க அருமையைப் புரிஞ்சுக்குவாங்க. குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீங்க. பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீங்க. அல்லது அது கேக்காமயே கெடைக்கும். ஒங்க சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. நீங்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக கெடைக்குங்க. கவர்மென்ட் கிட்டேயிருந்து ரொம்ப நாளாக எதர்பார்த்துக்கிட்டிருந்த குட் நியூஸ் அநாயாசமா வந்து சேரும்

சந்திராஷ்டமம் : மார்ச் 18 முதல் மார்ச் 20 வரை  சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமா ஆயிடுவீங்க. குதூகலமா பாட்டுப்பாடுவீங்க. பணவரவு உண்டுங்க. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துக்குவீங்க. மனைவி வழியில் ஆதாயமடைவீங்க. விலையுயர்ந்த ஜூவல்ஸ் வாங்குவீங்க. அலுவலக ரகசியங்களைத் தன்னிச்சையா அறிஞ்சுக்குவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீங்க. தீய நட்பைத் தவிர்த்துடுங்க. ப்ளீஸ். உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருங்கப்பா. ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகிச்சுக்குவீங்க. நீங்க வீண் வெவகாரங்களில் தலையிடாம ஒதுங்கிக்கறது பெட்டர்ங்க. முயற்சிங்க நன்மை தரும். தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் நிலையில் இருந்த பிராப்ளம்ஸ் அகலும். பல கால முயற்சி ஒண்ணு பலன் கொடுப்பதோட பலம் கொடுக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.