மேஷம்
வருமானம் இன்கிரீஸ் ஆகும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்குக்கூட சான்ஸ் உண்டாகும். ரொம்ப காலமா உங்களை வருத்திக்கிட்டிருந்த உடல் உபாதைகள் மெல்ல மெல்ல குணமாக ஆரம்பிச்சிருக்குமே? செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மத்தவங்க கிட்ட உங்க வார்த்தைகள் மனஸ்தாபம் ஏற்படுத்த சான்ஸ் இருக்கறதால பேசும்போது பொறுமை தேவை. ஆபீஸ்ல சகபணியாளர்கள் ஒங்களை அனுசரிச்சு நடந்துக்குவாங்க. உங்க வேலைங்கள்ல மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ சாலரி உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. கிடைச்சா அது உங்க அதிர்ஷ்டம்னு நெனைச்சுக்குங்க. பிசினஸ்/ தொழில்ல சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பற்றுவரவு சுமுகமாக நடக்கும். ஆபீசில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லேடீஸ்கு பிரச்னை இல்லாத வாரம். ஒர்க்கிங் லேடீஸின் எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருக்க வேண்டும்.

ரிஷபம்
பொருளாதாரம் சூப்பரா.. நல்லபடியா இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது என்பது உங்களுக்கே சர்ப்பிரைஸா இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. ஆபீஸ் விஷயமா வெளியூர்ப் பயணம் போக வேண்டி வரலாம். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீங்க. வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட சான்ஸ் உள்ளதால உணவு விஷயத்துல கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். ஆபீசில் உங்க வேலைல முழு கவனமாக இருக்க வேண்டியது ரொம்பவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். அது நீங்க விரும்பிய விதத்துலயே இருக்கும். ஒரு வேளை வெளி நாட்டுக்கு ஆன்சைட்ல அனுப்பக்கூட சான்ஸ் இருக்கு. சகபணியாளர்களிடம்ஜாலியா இருப்பீங்க. பிராப்ளம் ஏதும் வராது.வியாபாரம்எப்போதும்போல்நடக்கும்.

மிதுனம்
பணவரவுக்கு குறை ஒன்றும் இல்லை கண்ணா. ஆனால், மனசுல தேவையே இல்லாமல் தோன்றும் குழப்பங்களைத் தூக்கிக் கடாசுங்க. அம்புட்டும் கற்பனை பயந்தேங். மூத்த சகோதர வகையில் கொஞ்சம் அனுசரிச்சுக்கிட்டுப்போக வேண்டியிருக்குங்க.குழந்தைங்களுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். ஹாப்பியா செய்வீங்கப்பா. அவங்களும் உங்க கிட்ட “தாங்க் யூ டாடி / மம்மீ” ன்னு சொல்லும்போது மனசுல மயிலிறகு வருடும். ஆபீஸ்ல உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். பிசினஸ்/ தொழில்லஎ திர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள். கொடுக்கல் வாங்கலில் பொறுமை அவசியம். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

கடகம்
எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன்- மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனசுல லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச்சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள்கட்டுக்குள் இருக்கும். ஆபீஸ்ல ஒங்களோட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்கள் கிட்ட எச்சரிக்கையாக இருக்கணுங்க. இல்லாட்டி தேவையில்லாத மனஸ்தாபம்  வரலாம். அது எதுக்க வீணா? அவாய்ட் செய்யலாம்ல. பிசினஸ்/ தொழில்ல எதிர்பார்த்ததைவிடவும் லாபம் அதிகமாகவரும் என்றாலும் அதற்காக கூடுதலா உழைக்கவும் வேண்டிஇருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள்கூடும் என்பதால் உடல்ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால்உ டனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆபீஸ்ல சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

சிம்மம்
குடும்பத்துல நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைங்க கிடைக்கும்.மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குள்ள பலரும் உங்களைத் தேடி வருவாங்க. அடுத்தவங்களுக்காக ஹெல்ப் செய்வதில் உற்சாகம் உண்டாகும். பர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கணுங்க.

கன்னி
பொருளாதார வசதிக்கெல்லாம் குறைச்சல் எதுவும் இல்லைங்க. செலவுகள்ஏற்பட்டாலும்சமாளிச்சுடுவீங்க. நெருங்கியரிலேடிவ்ஸ் கிட்ட கொஞ்சமாச்சும் பக்குவமாக நடந்துக்குங்க. அதனால, தேவையே இல்லாத பிரச்னைங்களைத்தவிர்த்துடலாம்ல. பிள்ளைங்களால மகிழ்ச்சி உண்டாகும்.. திருமண வயசுல உள்ளவங்களுக்கு நல்ல இடம் அமைஞ்சு திருமணம் நிச்சயமாகும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறுவேலைக்கு இப்போதைக்கு முயற்சிக்க வேணாம். ஆபீஸ்லசக பணியாளர்களளை ஸ்லைட்டா அனுசரிச்சுக்கிட்டுப் போயிடுங்களேன். ப்ளீஸ். குடும்ப ஹெல்த் பற்றி கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த உலகப்போர் முடிவுக்கு வந்து  ஹப்பாடான்னு நிம்மதி தரும்.  விருந்து  நிகழ்ச்சிகள்ல கலந்துக்குவீங்க. உறவினரிடைய  மனஸ்தாபம் தீர்ந்து நல்லுறவு ஏற்பட சான்ஸ்ண்டு. எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலா அலைய வேண்டி வந்தாலும் ரிசல்ட் சுபமே.

துலாம்
வாரமுற்பகுதில நீங்க ரொம்ப காலமா எதிர்பார்த்துக்கிட்டிருந்த நல்லநியூ ஸ்வந்துசேரும். பேச்சினால வீண் மனஸ்தாபம் ஏற்படாம பார்த்துக்குங்க. சுருங்கச் சொன்னா, பேசும்போது ரொம்பவே கவனமா இருக்கறது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால சமாளிச்சுடுவீங்கப்பா. திருமண முயற்சிகள் சாதகமா முடியும். அலுவலகத்துல சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதுவேலைக்கு அப்ளை செய்திருப்பவங்களுக்கு நல்ல நிறுவனத்துலேயிருந்து அழைப்பு வரும். பிசினஸ்/ தொழில்ல எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமா முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீஸ்க்கு செலவுகள் குறைவதால சேமிக்கக்கூட சான்ஸ் இருக்கு. வேலைக்குப் போற லேடீஸ்க்கு ஆபீசில் பெரிய அளவுல சலுகைங்க் எதையும் எதிர்பார்க்க முடியாது. இட்ஸ் ஓகே. அது இல்லாமயே ஜமாச்சுடுவீங்க நீங்க.

விருச்சிகம்
இந்த வீக்நீங்க எதிலும் பொறுமையைக் கடைப்பிடிச்சாகணுங்க. அம்மா கிட்ட ஃபைட் செய்யாதீங்க. அவசரப்பட்டு யாருக்கும் எந்தவாக்குறுதியும் தந்துடப் போறீங்க. வேணாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குப் போறப்போ கேர்ஃபுல்லா உங்க பொருளையெல்லாம் பாதுகாத்து வைச்சுக்குங்க. சகோதரர்fள் கிட்ட அனுசரிச்சுக்கிட்டுப் போகணுஙுக. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டு. ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீங்க. பயணம் செய்யும் போது கவனம் தேவைங்க. சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபட்டு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. மாணவங்க படிப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிங்களை வசூல் செய்யறதுல மும்முரமா ஈடுபடுவீங்க. அதுல ஓரளவாச்சும் சக்ஸஸ் கிடைக்கும்.

தனுசு
வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம்உ ள்பட எல்லாமே சூப்பரா.. திருப்திகரமாக இருக்கும். சிறியஅளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் இந்த வாரமே நார்மலாயிடுவீங்க. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நல்லா ஆலோசனை செய்ஞ்சு எடுக்கறது நல்லது. வீட்ல சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு சான்ஸ் உள்ளது.வேலைக்குச்செல்லும் அன்பர்கள் வேறுவேலைக்கு முயற்சிப்பபதைச் கொஞ்ச வாரங்களுக்குப் போஸ்ட்போன் செய்யலாமே?ஆபீஸ் பணிகளிலும் கேர்ஃபுல்லா இருக்கறது அவசியம். பிசினஸ்/ தொழில்ல லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். நிச்சயமா நஷ்டம் இருக்காது என்பது ஹாப்பி நியூஸ். கடையை புதுஎடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்லபடியா சக்ஸஸ் ஆகி வியாபாரம் மெல்ல உயரும்.

மகரம்
பொருளாதார நிலைமை நல்லபடியா இருக்கும். அவ்வப்போது மினி சைஸ் பிராப்ளம்ஸ் ஏற்பட்டாலும் உடனுக்குடன்ச ரியாகிவிடும். வீடு, மனை வாங்கணும்னு நீண்டநாள்களாக நீங்க நினைச்சது இப்போ சாதகமா முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு சான்ஸ் உண்டு. வேலைக்குப் போறவங்களுக்கு ஆபீஸ்ல உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குக்கூட சாத்தியமுண்டு. பிசினஸ்/ தொழில்ல முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம். அவசியம் முடிவுஎடுக்க வேண்டிய நிலைஏ ற்பட்டால், தகுந்தவங்க கிட்ட அட்வைஸ் கேட்டுசெய்ங்க. ஆபீஸ்ல வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் அருமையாச் செய்து முடிப்பீங்க. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினருடன் கோபப்படாம நிதானமாப்பேசி அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். சகோதரர் வகைல உதவி கிடைப்பதில் டிலே ஏற்படலாம். கோபப்படாதீங்க. செய்வாங்க. வாகனத்தை கவனமாக ஓட்டுங்க.

கும்பம்
பொருளாதார நிலை நல்லபடியா இருக்கும். உங்களுக்கு இப்போதைக்கு வீண்செலவுகள் எதுவும்ஏற்படாது. இன்னும் கேட்டால் பாங்க் பேலன்ஸ் உயரும். கணவன் – மனைவிக்கிடையே சின்ன சைஸ் பிரச்னைங்க தோன்றக்கூடும். அதெல்லாம் ஊதித்தள்ளி ராசியாயிடுவீங்க. இருந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. வெளியூர்ப்பயணங்களால உடல்அசதியும் சோர்வும் உண்டாகும். பல காலமாய்க் கருத்து வேறுபாட்டின்காரணமாக பிரிஞ்சிருந்த ரிலேடிவ்ஸ் உங்களைப் புரிஞ்சுக்கிட்டு வருத்தம் தெரிவிப்பாங்க. ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சகபணியாளர்கள் உங்கபணிகளில் உதவிகரமாக இருப்பாங்க. ஒருசிலருக்குஅவங்கவங்கவிரும்பினபடிஇடமாறுதல்கெடைக்கும்.தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் ஒரு வழியா முடிஞ்சுடும்.
சந்திராஷ்டமம் : ஜூலை 11 முதல் ஜூலை 14 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருக்க வேண்டும்.

மீனம்
பொருளாதார நிலைமை ஹாப்பியாஇருக்கும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் பிளஸ் புரிதல் அதிகரிக்கும். குடும்ப விஷயமா வெளியூர்ப்பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியா இருக்கும். இதுவரை இருந்துக்கிட்டிருந்த மருத்துவச்செலவுகள் குறையும். ஆபீஸ்ல திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்லவிரும்பறவங்க அதற்கான முயற்சிகளை  இந்தவாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும். பிசினஸ்/ தொழில்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர்வாடகைவீட்லேயிருந்து சொந்தவீட்டுக்கு மாறிப்போவீங்க. அல்லது அதற்கான முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போடுவீங்க. லேடீசுக்கு ரொம்பவே சந்தோஷமான வாரம் இது. வேலைக்குப் போற லேடீஸ் ஆபீசில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும் அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கேர்ஃபுல்லா இருங்க. அதற்கான பாராட்டு எதையும்  எதிர்பார்க்க வேணாம்.
சந்திராஷ்டமம் :ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருக்க வேண்டும்.