மேஷம்

யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். . கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பாங்க.

ரிஷபம்

எதிலும் முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி மகிழ்வீங்க. வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். . எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். ஸ்டூடன்ட்ஸ், விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு தள்ளிப்போன நன்மைகள் விரைவாய் நடந்து வியக்க வைக்கும்.  குழந்தைகளின் சிரமங்க விரைந்து தீரும்.

மிதுனம்

இந்த வாரம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீங்க. செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீங்க. ஒங்களோட திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். ஒங்களோட வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். அப்பாவோட முரண்பட வேணாங்க. அவரு உங்க நல்லதுக்குத்தான் சொல்றாரு.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

கடகம்

ஆபீஸில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவாங்க. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். புது வீடு கட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 13ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

சிம்மம்

மனசுல காரண காரியத்துடன் மகிழ்ச்சி உண்டாகும். அவசியமற்ற வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வேலைப்பளு இருக்கும். ஆனாலும் வெற்றிகரமாக சாதிப்பதால் பாராட்டும் இருக்கும்… பலனும் இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீங்க. அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீங்க. தடை தாமதங்கள் ஸ்லோவாய் விலகும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 15ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

கன்னி

இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்துல ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. இந்த வாரம் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். ஆபீஸில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க. புதிய பதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தைச் சமாளிக்க வேண்டி வரலாம். அரசு விவகாரங்களில் சற்றுக் கேர்ஃபுல்லா செயல்படுவது அவசியம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்கணுங்க.

துலாம்

வியாபாரிகளைப் பொருத்தவரையில் நீங்கள் விற்கும் அல்லது டீல் செய்யும் பொருளுக்கு மிகுந்த வரவேற்பும் டிமாண்டும் இருக்கும். நல்ல வேளையாகத் தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். ஆபீஸில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் வீற்றிருக்கிறார். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்பட சான்ஸ் இருக்குங்க. லேடீஸ்க்கு, காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீங்க. உழைப்புக்கேத்த லாபமும் நன்மையும் கெடைக்கும்.

விருச்சிகம்

உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவீங்க. அது நல்லதுதான். அவங்க மூலம் வரக்கூடிய விரச்னை ஒண்ணிலிருந்து தப்பிச்சீங்க. பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீங்க. கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். லேடீஸ்க்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடலாம். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீவிர யோசிச்சு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பான கவலை நீங்கும். இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனசுல நிம்மதியும் அதே அளவுக்கு இன்கிரீஸ் ஆவுங்க.

தனுசு

சிக்கல்கள் தீர்வதில் இருந்த தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எந்த வகைல இன்வெஸ்ட் செய்வதுன்னு குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். சட்டென்று கோபம் வரும் ஒங்க குணத்தைக் கொஞ்சம் மாத்திக்குங்க. . தொலைதூரத் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்துல திடீர்ச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம்.  பட்… எல்லாமே டெம்பரரிதாங்க. இம்மீடியட்டா சரியாயிடும். சில சமயங்கள்ல அசடு வழியக்கூட சான்ஸ் இருக்கு. கவனமா இருந்துக்குங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வி பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

மகரம்

நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீங்க. முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. பணவரத்து அதிகரிக்கும். மனசுல புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகள்ல ஒங்க அழகான மூக்கை நுழைக்க வேணாம். லேடீஸ்க்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங் களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். ஸ்டூடன்ட்ஸ், கூடுதலாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனம் தளராமல் செயல்பட்டால் வெற்றி உண்டு. ஸ்டூடன்ட்ஸ்  வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிக்க முற்படுவீங்க. இந்த வாரம் உடல் அசதி நீங்கும். கவலைகள் அகலும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் இருந்த தயக்க நிலை மாறும். இவ்ளோ காலம் பின்னடைவு இருந்துக்கிட்டிருந்த விஷயங்கள் சட்டென்று மாறி சந்தோஷம் குடுக்கும்.

கும்பம்

இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீங்க. ஆபீஸில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பாங்க. பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களில் தடங்கல் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீங்க. ஆபீஸில் வேலைப்பளுவை உணர்வீங்க. மேலதிகாரிகள், உங்க செயல்களில் குறை காணலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்த தடைகள் அகலும். சில விஷயங்கள் கொஞ்சம் நிதானமாய் நடந்தாலும் நல்லபடியா நடந்து முடியுங்க.

மீனம்

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்களுக்கு மனசுல புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.  காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, செயற்கரிய செயல்களைச் செய்வீங்க. கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவீங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வியில் இருந்த மெத்தனப்போக்கு மாறும். பணப்புழக்கம் திருப்தியா இருக்கும். தொழில், பிசினஸ் சீராக இருக்கும். லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும். தொலைதூரத்துல அல்லது  ஃபாரின்ல வசிக்கற மகன் அல்லது மகள் வீட்டுக்கு வருவீங்க. சந்தோஷம் பெறுவீங்க. மகிழ்வித்து மகிழ்வீங்க.