மேஷம்

செய்யும் தொழில் மூலம் லாபமும் பண வரவும் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். கூடவே சுப செலவுகள் துணையாக வரும். ஃபாரின்ல  உள்ளவர்களுக்கு சிக்கல்கள் நீங்கி நல்ல செய்திகள் வரலாம். எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் கூடவே வரவுகளும் அதிகரிக்கும். திடீர்னு பண வரவு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி வீட்டில் உள்ளவங்களை ஹாப்பி ஆக்கிடுவீங்க. குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அண்ட் பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதி வந்து மனசில் உட்கார்ந்து ஆட்சி செய்யும். பணிபுரியும் இடத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் ஈஸியா சமாளிப்பீங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. அவ்வப்போது சின்னச்சின்ன மருத்துவச் செலவுங்க வந்தாலும் உடனே அகலும். பாசிட்டிவ்வான விஷயங்கள் அதிகரிக்கும். உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது

ரிஷபம்

கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் பிரமோஷன் கிடைக்கும் புதிய வேலைக்கு முயற்சி செய்யும் முயற்சியைக் கொஞ்சம் தள்ளி வைப்பது பாஸிபிளா என்று யோசிங்க. தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். கடும் உழைப்பு தேவைப்படும். வீடு, பூமி வாங்குவதில் கவனம் செலுத்துவீங்க. பூர்வீக சொத்து விற்பனையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொதுவாழ்க்கையில் உள்ளவங் களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துக்கிட்டிருந்த சிரமங்கள் டாட்டா சொல்லிக்கிளம்பிடும்.  திடீர் மருத்துவ செலவுங்க வீட்டில் குறையும். நினைத்த விஷயம் எல்லாம் சிறப்படையும். எதிலும் பொறுமையும், நிதானமும் தேவைங்க. வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் தானாக வந்து சேரும். நீங்களா முயன்றால் டிலே ஆகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கேர்ஃபுல்லா இருங்க .. ப்ளீஸ். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும்.

மிதுனம்

தைரியம் தன்னம்பிக்கை இன்கிரீஸ் ஆகும். வேலையில் இடமாற்றம் ஏற்பட சான்ஸ் இருக்குங்க. நம்பிக்கையும் தைரியமும் தரக்கூடிய  வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். தொழிலை விரிவு படுத்துவீங்க. மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். செய்யும் தொழில் லாபம் அதிகரிக்கும். சுப விரய செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். குடும்ப ஆரோக்கியத் திற்காக செலவு செய்வீங்க. நண்பர்கள் உறவினர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வீங்க. விருந்து விஷேசங்களில் பங்கேற்பீங்க. தங்க நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். பண விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. விழிப்புணர்வு அதிகரிப்பதால் சிரமம் குறையும். விருந்து சாப்பிடும் சான்ஸ் வரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும்.

கடகம்

மற்றவங்க பணத்தைக் கையாளும்போது செயல்களில் கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும்போது கவனம் தேவை. வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிங்க. திடீர்ப் பண வரவு வரும். மகன் அல்லது மகளுக்காக நல்ல வகையிலான செலவுங்க அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் கலகலப்பு அதிகரிக்கும். ஃபாரின்ல  உள்ளவர்களுக்கு சுப செய்திகள் தேடி வரும். எதிரிகள் தொல்லை ஒழியும். திடீர்ப் பண வரவு வரும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் என்றாலும் பெரிய ரிஸ்க் எடுக்க வேணாங்க. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்க வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். நீங்க எடுக்கும் முயற்சிங்களுக்கு வெற்றி கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். கவலைகள் தீரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீங்க. திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசி முடிக்கும் முன்பு நல்லா விசாரிச்சுடுங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 9 முதல் டிசம்பர் 11 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.  

சிம்மம்

நிறைய நன்மைகள் நடைபெறும். பண வரவு அதிகரிக்கும். சுபசெலவு வரும். வராத பணம் கைக்கு வரும். மனதில் உள்ள எண்ணங்கள் காரணமாய் உடல் ஆரோக்கியத்தில்  பாதிப்பு வராதபடி கவனம் தேவை. வருமானம் அதிகம் வந்தாலும் சுப செலவுகள் காத்திருக்கிறது. மகன்/ மகளால் மனம் சங்கடப்பட்ட நிலை மாறி மனசில் உற்சாகம் வரும். அலுவலகப் பணியில் சற்றே அதிக கவனமாக இருங்க. உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவதுடன், பொருளுதவியும் செய்வீங்க. கடன் அனுமதி ஈஸியாய்க் கிடைக்கும். குடும்பத்தில் உங்க முயற்சியால் திருமண சுப காரியம் கை கூடி வரும். குரு பார்வை கோடி நன்மை. சுப செய்திகள் தேடி வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும் திடீர் யோகம் உண்டாகும். ஸ்டூடன்ஸ்க்குப் படிப்பு பற்றிய குழப்பங்கள் நீங்கும். பெண்கள் நகைகள், ஆடை ஆபரணங்கள்  வாங்குவது போன்ற பெரிய செலவுங்க செய்யறதுக்கு முன்னாடி நல்லா யோசியுங்க.  

சந்திராஷ்டமம்: டிசம்பர் 11 முதல் டிசம்பர் 14 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். 

கன்னி

திருமண சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிங்க வெற்றிகரமா முடிஞ்சு நிம்மதி தரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வேலை கிடைக்காதவங்களுக்கு நல்ல ஜாப் கிடைக்கும். சுப செலவுகளுக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும், பிள்ளைங்க விஷயத்தில் கவனமும் கண்காணிப்பும் அவசியம். கவர்ன்மென்ட் வேலைக்காக முயற்சி செய்யலாம் ஈஸியா கிடைக்கும். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்திலிருந்து ஒரு ஷேர் கிடைக்கும். நிறைய முயற்சியின்பேரில் வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்றே அதிக லாபம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். பெண்களால் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் முன்பைவிட சற்றே அதிகரிக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும் ஆனாலும் அசதி அதிகம் இருக்காது. வாகனங்களில் செல்லும் போது கவனம் கட்டாயம் தேவை. கையெழுத்துப் போட்டு பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 14 முதல் டிசம்பர் 16 வரை, சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். 

துலாம்

தடைகளைத் தாண்டி சுப காரியங்களை உங்க பேச்சினாலும் செயல்பாடுகளாலும் வெற்றி பெறச்செய்வீங்க. எதிர்பாரத பண வரவு வந்து சந்தோஷத்தை அள்ளித் தரும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், கவர்ன்மென்ட் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புது வாகனம் வாங்கும் முயற்சி, சிறு தடை தாமதத்துக்குப் பிறகு சூப்பரா வெற்றியடையும். பணிபுரியும் பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமாக அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி தேடி வரும். ஆரோக்கியத் தொல்லைகள் மெல்ல மெல்லக்குறையும். உணவு விசயத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பணியிடத்தில் ஜமாய்ப்பீங்க. விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைங்க மூலம் நல்ல நியூஸ் வரும். வீட்டில் நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைங்க நீங்கும். வண்டி வாகனம் வாங்குவீங்க. சிலருக்கு வீடு/ இடமாற்றம் ஏற்படும். இடம் வாங்குவது தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். கடுமையான  முயற்சி காரணமாக வெற்றி கிடைக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த வாரம் பேசலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நெருக்கடிகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. எல்லா முயற்சிகளிலும் ஓரளவுதான் வெற்றி கிடைக்கும். குடும்பத்தோடு ஆன்மீகப் பயணம் செல்வீங்க. தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். மாணவர்களுக்குப் படிப்பில் இன்டரஸ்ட் அதிகரிக்கும்.  

தனுசு

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். இளைய சகோதரர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு முன் நல்லா யோசிச்சு முடிவு செய்ங்க. உறவினர்கள் வருகையால் சுப செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீங்க. பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டாகும். கண் தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சனிக்கிழமை கோவிலுக்குச் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். வண்டி வாகனம் வாங்கலாம். உங்க முயற்சியாலும் உழைப்பாலும் வேலையில் பிரமோஷன் கிடைக்கும்.

மகரம்

பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. கோபப்பட்டு பேச வேணாங்க திடீர் யோகம் உண்டாகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். தலைமைப் பதவி தேடி வரும். உழைப்பு காரணமாகச் செய்யும் வேலைகளில் வருமானம் சுமாராய்க் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிகப்பெரிய காரியத்தை சாதிக்கப்போகிறீர்கள். ஃபாரின்ல  இருந்து நல்ல நியூஸ் வரும். பிள்ளைங்களால சந்தோஷம் உண்டாகும். சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு இடமாற்றம் ஏற்படும். பண வரவு அதிகரித்தாலும் செலவுகள் கூடவே வரும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பேச்சில் பொறுமையும் நிதானமும் தேவை. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு பிரமோஷன் பிளஸ் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பும் குதூகலமும் இருப்பதால் மனசு நிம்மதியா இருக்கும். எந்த நன்மையிலும் தடை தாமதம் இருந்தாலும் இறுதியில் நல்லபடியா முடியுமுங்க.

கும்பம்

வேலையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வங்கிக் கடன் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திடீர் பண வருமானம் வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி ,தெளிவு பிறக்கும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் பயணங்களால் நன்மை உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிசினஸ்ல புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவாங்க பயணங்களால் நன்மை ஏற்படும். திருமணம் உங்க எண்ணப்படியே கை கூடி வரும். அரசாங்க வழியில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். பெற்றோர் குழந்தைங்க இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைங்களால ஏற்பட்ட டென்ஷன் அவங்களாலேயே தீரப்போகுது. நண்பர்களால் நன்மை அதிகரிக்கும். கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலை / தொழிலில் அழுத்தம் குறையும். ஷேர் போன்ற விஷயங்களில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், பெண்களுக்கு, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சிலர் பிரச்சினை ஒன்றை சந்திக்க நேர்ந்தாலும் அது சுலபமாய் முடிவுக்கு வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தப் போகணுங்க. கவர்ன்மென்ட் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விரய செலவுகள் அதிகரிக்கும் அதை சுப விரய செலவாக மாற்றுங்க. உறவினர்கள் வழியில் செலவுங்க எட்டிப்பார்க்கும். உங்க முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிரிங்களால் ஏற்பட்ட பிராப்ளம்ஸ் நீங்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். எதிரிகள் தொல்லை காணாமல் போயிடுங்க. வண்டி வாகனங்கள் பராமரிப்பு செலவுகள் வரலாம். பெண்கள் சுப காரியங்களில் பங்கேற்பீங்க. திடீர் திருமண யோகம் வரும். மாணவ மாணவியர்கள் நண்பர்கள் விசயத்தில் கவனம் தேவை.