சென்னை: மாநிலங்களில் நடைபெற்று வரும் “SIR’ செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி  தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,   மாநிலத்தில் SIR நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையத்தின் (EC) பதிலை நீதிமன்றம் விசாரித்த நிலையில், மாநிலங்களில் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும்  “SIR’ செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளது.

அதாவது,  வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்குவங்கம் உள்பட மாநிலங்களுக்கு  உச்சநீதிமன்றம் தெரிவித்தது. “எந்த உத்தரவுகள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டாலும், நாங்கள்  உத்தரவுகளை பிறப்பிப்போம். ஆனால் SIR செயல்முறைக்கு எந்தத் தடையும் அனுமதிக்க மாட்டோம். இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் விசாரணைகளின் போது கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் SIR நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் (EC) அளித்த பதிலை நீதிமன்றம் விசாரித்தபோது இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வாக்குரிமை பெற்றுள்ளதால், அவர்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கு மம்தா அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதுடன், தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டதுடன், வழக்கில் மம்தாவே ஆஜராகி தனது கருத்துக்களை முன்வைத்தார். இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு பிப்ரவரி 9ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது மம்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதையடுத்து கருத்து தெரிவித்த   நீதிபதிகள் அமா்வு , ‘எஸ்ஐஆா் விவகாரத்தில் என்னென்ன உத்தரவுகள் அல்லது தெளிவுரைகள் தேவையோ, அவற்றை உச்சநீதிமன்றம் வெளியிடும்.

எஸ்ஐஆா் பணியில் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். இது மாநிலங்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும்’ என்று தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் வன்முறையை மாநில அரசு தடுக்கத் தவறியதாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது. அதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியின்போது வாக்காளா்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களை பரிசீலனை செய்வதற்கான காலக்கெடுவை வரும் பிப்.14-இல் இருந்து குறைந்தபட்சம் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அந்த மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை பிப்.14-ஆம் தேதி வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது தாமதமாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில்,  மேற்குவங்க மாநிலத்தில் வசிப்பிடச் சான்றிதழ்கள் பெருமளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  கடந்த ஒன்றரை மாதங்களில், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மாநகராட்சியில் வசிப்பிட சான்றிதழ் கோரி, 18,605 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

பொதுவாக வசிப்பிட  சான்றிதழ்களைக் கோரி, 200-க்கும் குறைவான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுவதே வழக்கம்.  ஆனால், எஸ்ஐஆர்த நடவடிக்கைக்குபிறகு,  அது பெருமளவு அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக கள சரிபாா்ப்புப் பணிக்குப் பின்னா், காவல் துறை அளித்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து 14,590 வசிப்பிடச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]