டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடப்போவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இண்டியா கூட்டணியில் ஆம்ஆத்மி கட்சி ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நிலையில், காஷ்மீரில் ஒரு இடத்தையும், ஹரியானாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம்ஆத்மி அறிவித்து உள்ளது.
ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, . அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரசையும், திமிர் பிடித்த பா.ஜனதா வையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள் நாங்கள் என்றவர், அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தது.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பூஜ்ஜிய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது. அரியானாவில் கூட்டணி அமைக்க “இந்தியா’ கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது என்று குற்றம் சாட்டியவர், கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை என்று தெரிவித்தவர், ஹரியானாவில், . ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன. இதனால், ஆம் ஆத்மி அரியானாவில் போட்டி யிட்ட அனைத்து இடங் களிலும் தோல்வியடைந் தாலும், காங்கிரஸ் பெரும் பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது. இது, ஆளும் பா.ஜனதா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப் பதற்கு வழிவகுத்துள்ளது. இதனால், டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.