பெங்களூரு:
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி பெற்று தருவேன், இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறி உள்ளர்.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த கடந்த 30-ந் தேதி 2-வது தடவையாக பதவி ஏற்றது. மோடி அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேருக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதில், முக்கியமான, சதானந்தகவுடாக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியஅமைச்சராப பதவி ஏற்ற சதானந்தா கவுடா முதன்முறையாக சொந்த மாநிலத்துக்கு வருகை தந்தார். அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில், பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியவர், மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாங்கள் சிறப்பான முறையில் செயல் படுவோம் என்றார்.
கர்நாடக மக்கள் டெல்லி வந்தால், அவர்களின் குறைகளை தெரிவிக்கும் பொருட்டு, கர்நாடகத்தை சேர்ந்த 4 மத்திய மந்திரிகளின் அலுவலகங்களிலும், கர்நாடக மக்களின் நலனுக்காக தனி அலுவலகம் திறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தவர், கர்நாடகாவின் வளர்ச்சி விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம் என்றார்.
தனது துறை, 100 சதவீத விவசாயிகள் மற்றும் மக்களுக்கு தொடர்புடையது என்றவர், விவசாயிகளுக்கு வேண்டிய உரங்களை நாங்கள் விநியோகம் செய்வோம் என்றும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி மானியம் நேரடியாக வழங்கப்படும், தாவணகெரேயில் உர குடோன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றார்.
மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு அனுமதி பெற்று கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை அந்த திட்ட அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவில்லை. கர்நாடக அரசு திட்ட அறிக்கை கொடுத்ததும், மேகதாது அணை கட்டும் நடவடிக்கை தொடரும்… இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு சதானந்தா கவுடாகூறினார்.