டெல்லி:
உச்ச நீதிம
ன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அதிமுகவின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
சசிகலா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் தமிழக ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்றார்.
பொதுச் செயலாளர் சசிகலா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel