நாமக்கல்

திமுகவைச் சேர்ந்த 2 நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் 11 பேர், திமுகவில் 5 பேர், பாமக சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். இவர்களில் ஆறாவது வார்டு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்த அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியான ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த துரைசாமி வெற்றி பெற்றார்.  தற்போது அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இரண்டு பேர், திமுகவில் இணைந்தனர்.

எனவே மொத்தம் உள்ள 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 8 ஆக அதிகரித்துள்ளது.  திமுகவும், அதிமுகவும் சம பலத்துடன் இருப்பதால், வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.