டெல்லி: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மதியம் 12 மணி நிலவரப்படி, ஹரியானாவில் பாஜக முன்னிலையிலும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையிலும் இருந்து வருகிறது.
ஹரியானாவில் பாஜக 49 இடங்களில் முன்னிலை வகிடத்து வருகிறது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இங்கு போட்டியிட்ட ஆம்ஆம்மி கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இது கெஜ்ரிவாலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தித் உள்ளது.
முன்னதாக, காலை முதலே 71 இடங்களில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் நேரம் ஆக ஆக அதன் வாக்கு வங்கி குறைந்து வந்தால், தற்போத 35 இடங்களாக சுருங்கி உள்ளது. பாஜக வேட்பாளர்கள், 2 இடங்களில் 100 வாக்குகள் வித்தியாசத்திலும், 2 இடங்களில் 70 வாக்குகள் வித்தியாசத்திலும், 6 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகின்றனர். எனவே நிலைமை எப்போது வேண்டுமானால் மாறலாம்.
அதுபோல ஜம்மு காஷ்மீரில் இண்டியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு (ஜே.கே.என்) போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜேகேஎன் கட்சி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்து பாஜக 28 தொகுதிகளிலம், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தேசிய மாநாடு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.