விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார்.

ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருவதாக சில போட்டோக்களை ஷேர் செய்தார்.

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் தனியாகவா சென்றிருக்கிறீர்கள்? உங்கள் காதலி வரவில்லையா என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் தனது காதலி தன்னுடன்தான் மாலத்ததீவில் இருக்கிறார் என்று கூறும் வகையில் ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.