அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிலைத்து நின்று நன்றாக ஆடிவந்த விராத் கோலி, 74 அடித்திருந்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட்டினால் ரன்அவுட் செய்யப்பட்டார்.
இதனால், இந்திய அணிக்கு தேவையற்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் ரன்அவுட் ஆவது எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம்
இன்றையப் போட்டியில், விராத் கோலி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேவையில்லாமல் ரன்அவுட் ஆகியுள்ளார். அவரும், துணைக் கேப்டன் ரஹானேவும் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரஹானே, தற்போதைய நிலையில் 41 ரன்களை அடித்துள்ளார். அவருடன் தற்போது அனுமன் விஹாரி இணைந்துள்ளார். தற்போதைய நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்துள்ளது.