சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இருவருமே அரைசதம் அடித்துள்ளார்கள்.
மொத்தம் 133 பந்துகளை சந்தித்துள்ள விராத் கோலி, 7 பவுண்டரிகளுடன் 59 ரன்களை அடித்தார். மொத்தம் 68 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அஸ்வின் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களை அடித்துள்ளார்.
தற்போதைய நிலையில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட மொத்தமாக 389 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த இணை இன்னும் நிலைத்துநின்று ஆடும் பட்சத்தில் இந்தியா மிகப்பெரிய முன்னிலைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.