புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில், இந்திய அணி, 31 ஓவர்களில், 1 விக்கெட் மட்டும் இழந்து 164 ரன்களை எடுத்துள்ளது.

தற்போதைய ரன்ரேட் 5.29 என்றுள்ள நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில், இந்திய அணி நிச்சயம் அதிரடி ஆட்டம் ஆடியாக வேண்டும்.

விராத் கோலி 55 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார். ஷிகர் தவான் 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்து ஆடிவருகிறார்.

அவருக்கான ஒரு எளிய கேட்ச்சை மொயின் அலி தவறவிட்டார். இதனால் 60 ரன்களில் இருந்த அவர், தற்போது 80 ரன்களைத் தாண்டியுள்ளார்.

இன்னும் 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில், 19 ஓவர்களே பாக்கியுள்ள சூழலில், இந்திய அணி 300 ரன்களைத் தாண்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் தேவையும் உள்ளது.