ண்டிகர்

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் கல்ந்துக் கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள விவசாயிகளில் பலர் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

அதிகாரிகள் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தினர்.  எனவே பிப்ரவரி 13-ந் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது.

நேற்று இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அபோது வினோஷ் போகத், விவசாயிகளின் கோரிக்கை சட்டவிரோதமானது இல்லை எனவும். அரசு அதை காதுகொடுத்து கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.