விக்ரம். துருவ் இணையும் முதல் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். தந்தை விக்ரம், மகன் துருவ் ஒரேபடத்தில் இணைவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது விக்ரமின் 60 வது படமாக உருவாகவிருக்கிறது.
விக்ரம், துருவ் இணையும் படத்துக்கு ’திறவு கோல் மந்திரவாதி’ எனப் பெயரிடப்பட்டி ருப்பதாக தகவல் பரவுகிறது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு மறுத்துள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்துக்கு ’சுருளி’ என பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அப்படத் துக்கு ’ஜகமே தந்திரம்’ எனப் பெயரிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.