சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி கூட்டணி ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் பணிபுரிந்தது.
இதற்குப் பிறகு நலன் குமாரசாமி இன்னும் படம் இயக்கவில்லை.
இதனிடையே, மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பப்படுவதாக விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“ஒரு மாதத்துக்கு முன்பு நலன் குமாரசாமியிடம் பேசினேன். ‘சூது கவ்வும்’ படம் பண்ணும் போது புரியவே இல்லை. அவரிடமே அந்தப் படம் புரியாமலேயே நடித்தேன் என்று சொன்னேன். கதை பிடித்திருந்தது, ஆனால் கேரக்டர் புரியவே இல்லை.
‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவருடைய எழுத்து புரியும் போது, படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது தான் தலைவா உங்களுடைய எழுத்துகள் புரிகிறது. இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். சிறப்பா பண்ணலாம் தலைவா சொல்றேன் என்று சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

[youtube-feed feed=1]