சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பயரில் அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் கால்பதிக்க உள்ள விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல நடிகராக இருந்து வரும் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திரிஷாவுக்கும் விஜயக்கும் உள்ள நெருக்கம் காரணமாக, விஜய் மற்றும் மனைவி சங்கீதா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்த விவகாரம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும் என விமர்சித்து இருந்தார். இது பேசும்பொருளானது.
இந்த நிலையில்கணவன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்கீதா தனது மனுவில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை ‘அந்த’ நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். விஜய்யின் நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மனரீதியான சித்திரவதை அனுபவித்தேன். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.”
இவ்வாறு தெரிவித்தார்.