சென்னை: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டப்படி நடக்கும் என முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தில் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு பகுதியில் தனக்குள்ள செல்வாக்கை நிலைநிறுத்த, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். அதன்படி, வரும் 18ந்தேதி ஈரோடு அருகே தவெக கூட்டம் நடக்க அனுமதி கோரப்பட்டது. முதலில் கேட்கப்பட்ட இடத்தை தர காவல்துறை மறுத்தவிட்ட நிலையில், ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனுமதி கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க.,வின் பெருந்துறை ஒன்றிய இணை செயலர் சசிகுமார், ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம்குமாரிடம், மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகிகள், த.வெ.க., தலைவர் விஜய் ஈரோட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு, தமிழக அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கூட்டம் நடத்த வேண்டும் என்றால், அதற்கான ஏற்பாட்டுக்காக கூடுதல் நாட்கள் தேவைப்படுகிறது. எனவே பெருந்துறை தாலுகா மூங்கில்பாளையம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் இருந்தபடியே பேச திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்துக்கு, 10,000 நிர்வாகிகள், 20,000 மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்விடத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களை அனுமதிக்க மாட்டோம். அதற்கான, அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, “கோயில் நிலத்தில் விஜய் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க முடியாது, அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுக்கப்ப ட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், விஜய் மக்கள் சந்திப்பு வரும்18ந்தேதி திட்டமிட்ட இடத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதி அளித்தார்.
முன்னதாக, இன்று காலை கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசாரக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர், த.வெ.க, அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான த.வெ.க. வினர்பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு வரும் 18-ந் தேதி வருகை தர உள்ளார். இந்த பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகிறோம்.
பிரசார கூட்டத்திற்கு, அரசு அலுவலர்கள் கேட்டது போல பல்வேறு பணிகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்னென்ன ஆலோசனைகளை சொல்கிறார்களோ, அதனை ஏற்று செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.
தலைவர் விஜய், புதுச்சேரி பிரசாரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதன் முறையாக ஈரோடு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கும் வகையில் இருக்கும் என்றார்.
இந்து அறநிலைத்துறை பொறுத்தவரை கடிதங்கள் கொடுப்பது அந்த துறையைச் சார்ந்த ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால், அங்கு கொடுக்காமல் காவல்துறைக்கு கொடுத்திருக்கிறார்கள். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என்றார்.
தவெகவில் இணைந்தது குறித்த எழுப்பிய கேள்விக்கு, என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. த.வெ.க.வில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் த.வெ.க.வில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் த.வெ.க,வுக்கு வரவேற்பு இருக்கிறது என்றார்.
தவெக அதிமுகவாக மாறும் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், த.வெ.க. அ.தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. த.வெ.க.வில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது என்றேன்.
தேர்தல் கூட்டணி, கூட்டணி தலைமை தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நாயகன், மக்களால் எதிர்காலத்தில் அரியணையில் அமர்த்த போகிற தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம். நாங்கள் அன்போடு அரவணைத்துக் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். யாரைக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார் என்றவர்,
நேற்று நடந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கிறோம் என்றார்.
[youtube-feed feed=1]