தராபாத்

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா இன்ஸ்டா லைவில் சர்ச்சைக்குரிய்விதமகா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது

தெலங்கானா. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமைசரவையில் வனத்துறை பொறுப்பை வகிப்பவர் கொண்டா சுரேகா. ஏற்கனவே பல சர்ச்சைககலை கிளப்பிய இவர் தற்போது மீண்டும் ஒரு புது விவாதத்தில் சிக்கியுள்ளார்.

அமைச்சர் சுரேகா தனது குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில்,

“இன்று நமக்கு பண்டிகை நாள். அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும்”

என்று கூறி உள்ளார்.

இன்ஸ்டாவில் எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர்,

“மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா”

என்று கேட்கிறார்.

அதற்கு சுரேகா,

“பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும். எவ்வளவு பீர் வேண்டுமோ, அவ்வளவு பீர் வாங்கி கொடுக்க வேண்டும். அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும். ஒரு சிலர் அது உள்ளதா என்று கேட்டார்கள். பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறேன்”

என்று பதில் கூறுகிறார்.

மற்றொரு பெண், இடையில் புகுந்த வாரங்கலில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓடவிடுகிறார். எனவும் இங்கு சுரேகாவும் அதுபோல் செய்வார் என்றும் கூறுகிறார். ஒரு பெண் அமைச்சர் இடம் பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தெலங்கனா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.