டெல்லி :  பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

97 வயதாகும்,  பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்வானி லால் கிருஷ்ண அத்வானி (பிறப்பு 8 நவம்பர் 1927) பாஜகவின் மூத்த அரசியல்வாதி ஆவார், 1980 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து மிக நீண்ட காலம் ஸ்ரீ எல்.கே. அத்வானி அதன் தலைவராகப் பணியாற்றினார். ஏறக்குறைய மூன்று தசாப்த கால நாடாளுமன்ற வாழ்க்கையைத் தொகுத்து, ஸ்ரீ எல்.கே. அத்வானி முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர், ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் (1999-2004) அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார்.  2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணியாற்றினார். வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவரின் 97வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் அவரை சந்தித்து ஆசி பெற்றனர்.