பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டி என்பவருக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கலந்துக் கொண்டார்.

அவருடன் சேர்ந்து சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.