சென்னை
இன்று தொடங்கி உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தற்போது உரையாற்றிக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கத் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளனர். நீட் தேர்வு விலக்கு தீர்மானம் குறித்து ஆளுநர் முடிவு எடுக்காததை கண்டித்து இந்த வெளிநடப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை எனவும் ஆளுநரை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.