5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை என்.வி. அருண். நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ்,அதுல்யா ரவி, சுபிக்ஷா, இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், ராம்குமார்,இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், நடிகர், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் போன்ற நூறுபேர் இன்று 10 ஆம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.