நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படங்களை பார்க்கும் போது, அந்தரத்தில் பைக்குகள் பறக்கும் மாஸான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்று தெரிகிறது.மேலும் இவை பார்ப்பதற்கு ஹாலிவுட் படத்தின் காட்சிகளை போல உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.